Advertisement


கரண் சர்மா அபாரம்: இளம் இந்தியா வெற்றி

அக்டோபர் 11, 2017.
 Comments  
 


karn sharma
 

விசாகப்பட்டனம்: நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியில் கரண் சர்மா ‘சுழலில்’ அசத்த, இந்திய ‘ஏ’ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து ‘ஏ’ அணி அதிகாரப்பூர்வமற்ற 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய ‘ஏ’ அணியுடன் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகள் முடிவில், தொடர் 0–0 என சமநிலை வகித்தது. மூன்றாவது போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்தில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து ‘ஏ’ அணி கேப்டன் ஹென்ரி நிக்கோலஸ் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு ஜார்ஜ் வொர்கர் (22), முன்ரோ (29) ஏமாற்றினர். பின், கரண் சர்மா ‘சுழலில்’ அசத்தினார். இவரது பந்துவீச்சில் கேப்டன் ஹென்ரி நிக்கோலஸ் (35), டாம் புரூஸ் (14), கிராண்ட்ஹோம் (24) உள்ளிட்டோர் சிக்கினர். முடிவில், நியூசிலாந்து ‘ஏ’ அணி 37.1 ஓவரில் 143 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக கரண் சர்மா 5 விக்கெட் வீழ்த்தினார்.

கைகொடுத்த விஜய்:

எளிய இலக்கை விரட்டிய இந்திய ‘ஏ’ அணிக்கு பிரிதிவ் ஷா (6), மயாங்க் அகர்வால் (8), கோஸ்வாமி (9) ஒற்றை இலக்கில் திரும்பினர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 37 ரன்கள் எடுத்தார். விஜய் சங்கர் (47*), தீபக் ஹூடா (35*) இணைந்து அசத்த வெற்றி எளிதானது. முடிவில், இந்தியா ‘ஏ’ அணி 24.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

இதன் மூலம், தொடரில் இந்திய அணி 1–0 என முன்னிலை பெற்றது.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?