Advertisement


மெஸ்சி ‘ஹாட்ரிக்’ *உலக கோப்பை தொடரில் அர்ஜென்டினா

அக்டோபர் 11, 2017.
 Comments  
 


fifa world cup 2018 argentina qualify
 

குயட்டோ: மெஸ்சியின் ‘ஹாட்ரிக்’ கோல் கைகொடுக்க, ரஷ்யா உலக கோப்பை தொடருக்கு (2018) அர்ஜென்டினா அணி தகுதி பெற்றது.

வரும் 2018ல் ரஷ்யாவில் உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இதற்கான தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான தகுதிச் சுற்றில் 10 அணிகள் மோதின.

பட்டியலில் ‘டாப்–4’ அணிக்கு உலக கோப்பை வாய்ப்பு, 5 வது இடம் பெறும் அணிக்கு மட்டும் ‘பிளே ஆப்’ வாய்ப்பு என்ற நிலை இருந்தது.  ஒரு போட்டி மட்டும் மீதமிருந்த நிலையில், 6வது இடத்தில் இருந்த அர்ஜென்டினா (25), உலக கோப்பை வாய்ப்பை இழக்கும் அபாய நிலையில் இருந்தது. 

நேற்று கடைசி சுற்று லீக் போட்டிகள் நடந்தன. ஈகுவடாரின் குயிட்டோ நகரில் நடந்த போட்டியில் அர்ஜென்டினா, ஈகுவடார் (20) அணிகள் மோதின. 

போட்டி துவங்கிய 38வது வினாடியில் ரொமாரியோ இபாரா ஒரு கோல் அடிக்க, 0–1 என, அர்ஜென்டினா பின்தங்கியது. இதையடுத்து, 2001க்குப் பின் ஈகுவடார் மண்ணில் வென்றதில்லை என்ற சோகம் தொடரலாம் என அச்சம் ஏற்பட்டது.

இதனால் அதிக எச்சரிக்கையுடன் விளையாடிய மெஸ்சி, போட்டியின் 11 வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து 18வது நிமிடம் மெஸ்சி இரண்டாவது கோல் அடிக்க, முதல் பாதியில் அர்ஜென்டினா 2–1 என, முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 62வது நிமிடம் மீண்டும் மிரட்டிய மெஸ்சி, மற்றொரு கோல் அடித்தார். இது இவரது ‘ஹாட்ரிக்’ கோலாக அமைய, அர்ஜென்டினா அணி 3–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

உலக கோப்பைக்கு ஓ.கே:

இதையடுத்து, 18 போட்டியில் 7 வெற்றி, 7 ‘டிரா’, 4 தோல்வியுடன் 28 புள்ளிகள் பெற்று, பட்டியலில் 3வது இடம் பிடித்து, உலக கோப்பை தொடருக்கு (2018, ரஷ்யா) தகுதி பெற்றது. தவிர, பிரேசில் (41 புள்ளி), உருகுவே (31), கொலம்பியா (27) அணிகளும் உலக கோப்பை தொடருக்கு முன்னேறின.


அமெரிக்கா ‘அவுட்’

வடக்கு, மத்திய, கரீபிய நாடுகளுக்கான (‘கன்காகப்’) தகுதிச் சுற்றில் அமெரிக்க அணி, தனது கடைசி போட்டியில் டிரினிடாட் அண்டு டுபாக்கோ அணியிடம் 1–2 என, தோற்க, பட்டியலில் 5வது இடம் பிடித்து, ரஷ்யா உலக கோப்பை வாய்ப்பை இழந்தது. 1986க்குப் பின் இந்த அணி, உலக கோப்பை தொடரில் பங்கேற்காமல் இருப்பது இது தான் முதன் முறை.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?