Advertisement


ஆஸி., வீரர்கள் பஸ் மீது கல்வீச்சு

அக்டோபர் 11, 2017.
 Comments [6]  
 


Security scare for Australian team in Guwahati
 

கவுகாத்தி: கவுகாத்தியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சென்ற பஸ் மீது கல் வீசிப்பட்டது. வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில், இந்தியா வென்றது. அசாமின் கவுகாத்தியில் உள்ள பார்சபரா மைதானத்தில் இரண்டாவது போட்டி நடந்தது.

இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. போட்டி முடிந்து வீரர்கள் ஓட்டலுக்கு திரும்பினர். இதன் அருகே சென்ற போது, திடீரென பஸ் ஜன்னல் மீது கல் வீசப்பட்டது. இதில் கண்ணாடி உடைந்தது. நல்லவேளையாக அந்த ஜன்னலுக்கு அருகில் யாரும் உட்காரவில்லை. வீரர்கள் காயமின்றி தப்பினர்.

பின்ச் ‘போட்டோ’:

கல் வீச்சில் உடைந்த பஸ் ஜன்னலை போட்டோ எடுத்து, தனது ‘டுவிட்டரில்’ வெ ளியிட்ட ஆஸ்திரேலிய வீரர் பின்ச் கூறுகையில்,‘‘ ஓட்டலுக்கு திரும்பும் போது, ஜன்னல் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பயமாக உள்ளது,’’ என, தெரிவித்துள்ளார்.

அஷ்வின் கண்டனம்:

ரசிகர்களின் இச்செயலுக்கு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘ ஆஸ்திரேலிய வீரர்கள் பஸ் மீது கல் எறிந்த சம்பவம் மோசமான செயலை காட்டுகிறது. அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்,’ என, தெரிவித்துள்ளார். 

வட கிழக்கு மாநிலங்களில் கிரிக்கெட்டை வளர்க்க, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) முயற்சிக்கிறது. இதற்காக பார்சபரா மைதானத்தில் முதன் முதலில் போட்டி நடந்த நிலையில், வீரர்கள் மீதான தாக்குதல் குறித்து அசாம் கிரிக்கெட் சங்க செயலர் பிரதிப் புரகோகெய்ன் கூறுகையில்,‘‘ வீரர்களுக்கு அனைத்து விதத்திலும்  பாதுகாப்பு தரப்பட்டது. இந்த சம்பவம் எப்படி நடந்தது எனத் தெரியவில்லை.  இருவரை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காது. வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தரப்படும்,’’ என்றார்.

ஆசியா ‘அலர்ஜி’

சமீபத்தில் வங்கதேசம் சென்ற ஆஸ்திரேலிய வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடந்தது. தற்போது இந்திய மண்ணிலும் இதுபோன்ற சம்பவம் நடந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு ஆசிய மண் என்றாலே ‘சுழல்’ அலர்ஜி ஒருபக்கம் இருக்கும். தற்போது, தாக்குதல் பயமும் ஏற்பட்டது துரதிருஷ்டம் தான்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
sathish 7 days ago | Report abuse
இனி நம் நாட்டு வீரர்கள் அங்கே சென்றால் நடக்கும் பஜனை. இது தேவையாடா?


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
MURUGAN 6 days ago | Report abuse
விராட் கோலியுடைய ரசிகர்கள் செய்த வேலையாயிருக்கும் தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
basheer 6 days ago | Report abuse
கல் விசியவர்கள் அடி முட்டாள்கள்


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
11   0  
Mahendiran one week ago | Report abuse
இது ஒரு தவறான செயல். வெற்றி தோல்வி இரண்டுமே விளையாட்டிற்கு அழகு.இந்தியன் டீம் பஸ் கண்ணாடி மீது தன கல் veesa வேண்டும்.


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
8   0  
P.S.KUMARAPPA one week ago | Report abuse
It is very unfortunate, regret, and condemnable for the assault made to our Australian brothers who have come here as our Guests. Winning or Losing is common in the Game. Possibility of any terrorist movement or any illegal infiltrators from neighbouring country wanted to defame the Government may not be ignored. The Assam Govt should be given more importance to trace the real culprits and put all in jail so that this kind of activity will not repeat again in the future


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
16   0  
BMV one week ago | Report abuse
போய் பாக்கிஷ்தான்,இலங்கை,சீனா(முரண்பட்ட /தீவிரவாதிங்க மேல) எல்லைல நின்னு கல்ல விட்டு தாக்குங்கடா முட்டாபசங்களா...
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?