Advertisement


‘தடம்புரண்டது’ இந்திய அணி * கவுகாத்தியில் தோல்வி

அக்டோபர் 10, 2017.
 Comments [5]  
 


india vs australia cricket
 

 கவுகாத்தி: இரண்டாவது ‘டுவென்டி–20’ போட்டியில் ‘பேட்டிங்’, ‘பவுலிங்கில்’ ஏமாற்றிய  இந்திய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில், இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி, அசாமின் கவுகாத்தியில் உள்ள பார்சபரா மைதானத்தில் நடந்தது. இது இந்திய மண்ணில் அறிமுகம் ஆன 49வது மைதானமாக அமைந்தது. 

‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் வார்னர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

துவக்கம் மோசம்:

இந்திய அணியின் ‘டாப்–ஆர்டர்’ துவக்கத்திலேயே தடம்புரண்டது. முதல் ஓவரை வீசிய பெஹ்ரன்டார்ப், 4வது பந்தில் ரோகித் சர்மாவை (8) அவுட்டாக்கினார். 6வது பந்தில் கேப்டன் கோஹ்லியை ‘டக்’ அவுட்டாக்க, மைதானம் ‘ஷாக்’ ஆனது. 

ஜாதவ் ஆறுதல்:

இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள், மணிஷ் பாண்டே (6), பெவிலியன் திரும்பினார். தவான் (2), தோனி (13) பொறுப்பற்ற முறையில் அவுட்டாகினர்.

கேதர் ஜாதவ் 27, பாண்ட்யா 25 ரன்கள் எடுக்க, இந்திய அணியின் ஸ்கோர் ஒரு வழியாக 100 ரன்களை எட்டியது. பின் வரிசையில் பும்ரா (7), குல்தீப் (16) அவுட்டாக, இந்திய அணி 20 ஓவரில், 118 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

எளிய இலக்கு:

போகிய போக்கில் எட்டிவிடும் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் (2), பின்ச் (8) அடுத்தடுத்து அவுட்டாகினர்.

பின் வந்த ஹென்ரிக்ஸ், ஹெட் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்த, ஆஸ்திரேலிய அணி வெற்றியை எளிதாக நெருங்கியது. 

குல்தீப் ஓவரில் அடுத்தடுத்து சிக்சர் அடித்த ஹென்ரிக்ஸ், அரைசதம் எட்டினார். இவர், சகால் பந்தை பவுண்டரிக்கு அனுப்ப, ஆஸ்திரேலிய அணி 15.3 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது. ஹென்ரிக்ஸ் (62), ஹெட் (48) அவுட்டாகாமல் இருந்தனர்.

இதையடுத்து ‘டுவென்டி–20’ தொடர் 1–1 என, சமநிலையை அடைந்தது.  மூன்றாவது மற்றும் கடைசி போட்டி, வரும் 13ம் தேதி ஐதராபாத்தில் நடக்கிறது.

 

முற்றுப்புள்ளி

கவுகாத்தி போட்டியில் தோற்றதை அடுத்து, சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, தொடர்ந்து ஏழு வெற்றி பெற்ற இந்திய அணியின் வெற்றி நடை முடிவுக்கு வந்தது. தவிர, 2012க்குப் பின், இந்தியாவுக்கு எதிரான ‘டுவென்டி–20’ போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   1  
Kamala one week ago | Report abuse
AUSTRALIA என்றுமே தலை சிறந்த TEAM அசைத்து பார்ப்பது கடினம் தான்.


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
1   0  
kannaiya srinivasan one week ago | Report abuse
தோல்வி அடுத்த வெற்றியின் அடித்தளம்.


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
M.k.subramanian one week ago | Report abuse
The performance of Indian Team is far from satisfaction. And that too, the poor performances of Rohit Sarma, Captain Kohli need to be mentioned first. . And then, almost all cricket enthusiasts in India became dismal on the awfully bad performances exhibited by Manish Pande, Dhoni and Dhawan - all the three players' exhibited irresponsibility and it did give a big shock. Did they play cricket? Or what? No accountability? We see such performances from High School boys We have to admit that the Australian Team led by its Captain Warner did play wonderfully. If India is defeated in a close game...we can say it is ok. But this kind of play is shocking. Now, the next question is how our Indian Team will perform well in the last Test to be played in Hyderabad on coming 13th? Will they wake up? Manian


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
1   0  
M.K.Subramanian one week ago | Report abuse
இவ்வாறாக, டுவெண்ட்டி-20 போட்டியில் மிகவும் பொறுப்பின்றி ஆடி, தோல்வியைத் தழுவிய இந்திய அணியின் ஆட்டம் பற்றி என்ன சொல்வது? அதுவும் தோனி, மனிஷ் பாண்டே , தவான் போன்றவர்கள் பொறுப்புடன் விளையாட்டில் ஈடுபடவில்லை. என்ன காரணமோ? இது யாருக்கும் சந்தோஷத்தை நிச்சயம் கொடுக்கவில்லை. மணியன்


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
4   0  
AarKay one week ago | Report abuse
தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்துவிட்டு, பெஞ்சில் அமர வைத்திருக்கிறார்கள். ரோஹித் ஷர்மாவும், மனிஷ் பாண்டேயும், எத்தனை முறை fail ஆனாலும், மீண்டும், மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும். அதுவே, கார்த்திக், பத்ரீ, பதானி என்றால், ஒரே ஒரு failure-க்கு பின்னர் அணியிலிருந்து தூக்கி விடுவார்கள். கோஹ்லியோ, தோனியோ கேட்ச் விட்டால், வெரி குட் effort என்று வர்ணனை செய்வார்கள். விஜய், அஸ்வின் விட்டால், reckless fielding என்பார்கள். சென்ற சீசனில், Duleep trophy , Deodar trophy-களில் பேட்டிங்-இல் முதலிடம், இந்த சீசனில், Duleep Trophy-இல் இரண்டாமிடம். இதற்கும் மேல் என்ன prove செய்ய இருக்கிறது? ஆனாலும் poor தினேஷ் கார்த்திக்கிற்கு மட்டும், பாராமுகம் Big Bash , CPL, என மற்ற T-20 தொடர்களிலும் ஆட அனுமதிக்காது BCCI. கொடுமை
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?