Advertisement


ஓய்வு பெறுகிறாரா நெஹ்ரா

அக்டோபர் 10, 2017.
 Comments  
 


ashish nehra india cricket
 

 கவுகாத்தி: நெஹ்ரா விரைவில் ஓய்வு பெறுவார் எனத் தெரிகிறது.

இந்திய அணியின் ‘சீனியர்’ வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா, 38. கடந்த 1999 பிப்ரவரியில் இலங்கைக்கு எதிரான கொழும்பு டெஸ்டில் அறிமுகம் ஆனார். அசார், கங்குலி, தோனி தற்போது கோஹ்லி என, பல கேப்டன்களுடன் விளையாடிய அனுபவம்  வாய்ந்தவர்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ‘டுவென்டி–20’ அணியில் சேர்க்கப்பட்ட இவர், முதல் இரு போட்டிகளில் களமிறங்கிய ‘லெவன்’ அணியில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும், இவரது அனுபவத்தை இளம் வீரர்கள் பும்ரா உள்ளிட்டோர் பெற்று வருகின்றனர்.

இதனிடையே, நெஹ்ரா வெகு விரைவில் ஓய்வு அறிவிக்கலாம் எனத் தெரிகிறது. ஆஸ்திரேலிய தொடரின் மூன்றாவது போட்டி (ஐதராபாத்) அல்லது வரும் நியூசிலாந்துக்கு எதிரான ‘டுவென்டி–20’ தொடரில், வரும் நவ., 1ல் சொந்தமண்ணில் (டில்லி, பெரோஷா கோட்லா மைதானம்) நடக்கும் போட்டியுடன், சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடை கொடுப்பார் என நம்பப்படுகிறது.

ஐ.பி.எல்., தொடரில் தொடர்ந்து பங்கேற்பார் என கூறப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?