Advertisement


ஸ்பெயின் ‘சூப்பர்’ வெற்றி

அக்டோபர் 10, 2017.
 Comments  
 


fifa world cup 2017 SPAIN
 

கொச்சி: கொச்சியில் நடந்த உலக கோப்பை (17 வயதுக்குட்பட்ட) கால்பந்து போட்டியில் கோல் மழை பொழிந்த ஸ்பெயின் அணி, 4–0 என்ற கணக்கில் நைஜரை வென்றது.

இந்தியாவில் ‘பிபா’ உலக கோப்பை (17 வயதுக்குட்பட்ட) கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் ‘டி’ பிரிவு, லீக் போட்டியில் ஸ்பெயின் அணி, முதன் முறையாக களமிறங்கும் நைஜரை எதிர்கொண்டது.

முதல் போட்டியில் பிரேசிலிடம் தோற்றதால், வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஸ்பெயின் வீரர்கள் களமிறங்கினர். இவர்களின் அசத்தலான ஆட்டத்தின் முன், நைஜர் வீரர்களின் ஆட்டம் கொஞ்சம் கூட எடுபடவில்லை. போட்டியின் பெரும்பாலான நேரத்தில் (62 சதவீதம்), பந்து ஸ்பெயின் வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்தது. 

அபெல் அபாரம்:

ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அபெல் ரூயிஸ், முதல் கோல் அடித்தார். இவர், 41வது நிமிடம் மற்றொரு கோல் அடித்து மிரட்டினார்.

முதல் பாதியின் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் சீசர், முழங்காலால் முட்டி ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 3–0 என, வலுவான முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் செர்ஜியோ கோமஸ்(82), தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். இதற்கு நைஜர் அணி வீரர்களால் கடைசி வரை பதிலடி தரவே முடியவில்லை.

முடிவில், ஸ்பெயின் அணி 4–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ‘டி’ பிரிவில் 2 போட்டியில் 1 வெற்றி, 1 தோல்விடையந்த ஸ்பெயின் அணி, 3 புள்ளிளுடன் அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

 

கோஸ்டாரிகா ‘டிரா’

நேற்று மர்கோவாவில் நடந்த ‘சி’ பிரிவு லீக் போட்டியில் கோஸ்டாரிகா, பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. இப்போட்டி 2–2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. கோஸ்டாரிகா சார்பில் ஜர்குயின் (26வது), கொமஸ் (67) மற்றும் கினியா சார்பில் பண்ட்ஜே (30), சவுமா (81) தலா ஒரு கோல் அடித்தனர்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?