Advertisement


சரியான வீரர்கள் தேர்வு: கேப்டன் கோஹ்லி மகிழ்ச்சி

அக்டோபர் 08, 2017.
 Comments  
 


Virat Kohli, Ranchi T20 Cricket, Australia
 

ராஞ்சி: ‘‘ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ‘டுவென்டி–20’ போட்டியில் கிடைத்த வெற்றிக்கு வீரர்களின் கூட்டு முயற்சி காரணம்.  மூன்றுவிதமான போட்டிக்கும் தனித்தனியாக ‘ஸ்பெஷலிஸ்ட்’ வீரர்களை தேர்வு செய்வதும் முக்கிய பங்கு வகித்தது, ’’ என, இந்திய அணி கேப்டன் கோஹ்லி தெரிவித்தார். 

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 18.4 ஓவரில் 118 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட போட்டி நிறுத்தப்பட்டது.

பின், ‘டக்வொர்த்–லீவிஸ்’ விதிப்படி இந்திய அணிக்கு 6 ஓவரில் 48 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ரோகித் (11) ஏமாற்றியபோதும், ஷிகர் தவான் (15*), கேப்டன் கோஹ்லி (22*), தலா 3 பவுண்டரி விளாச, இந்திய அணி 5.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

இது குறித்து இந்திய கேப்டன் கோஹ்லி கூறியது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ‘டுவென்டி–20’யில் கிடைத்த வெற்றிக்கு வீரர்களின் கூட்டு முயற்சி காரணம். அதே நேரம், நிர்வாக ரீதியில் தரப்பட்ட திட்டமும் முக்கிய பங்கு வகித்தது. இதன்படி, மூன்றுவிதமான போட்டிக்கும் பிரத்யேகமாக ‘ஸ்பெஷலிஸ்ட்’ வீரர்களை களமிறக்கினோம். ‘சுழலில்’ குல்தீப், சகாலை பயன்படுத்தினோம். இவர்கள், சில போட்டிகளில் அதிக ரன்களை வழங்கினாலும், அடுத்த போட்டியில் மீண்டு விடுகின்றனர். 

தனித்திறமை: இதைப்போல, ‘வேகத்தில்’ புவனேஷ்வர், பும்ரா ஒரு நாள், ‘டுவென்டி–20’ போட்டியின் கடைசி கட்டத்தில் சிறப்பாக செயல்படுகின்றனர். ஏனெனில், ‘யார்க்கர்’ வீசுவதற்கும் தனித்திறமை தேவை. பேட்ஸ்மேன்களை தவறான ‘ஷாட்’ அடிக்க வைத்து, விக்கெட் வீழ்த்துகின்றனர். மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள ஷிகர் தவான் 15 ரன்கள் எடுத்தாலும் நம்பிக்கை அளித்துள்ளார். 

புரியாத விதி: ஆஸ்திரேலிய அணியை 118 ரன்களில் சுருட்டினோம். மழை காரணமாக, எங்களின் இலக்கு 6 ஓவரில் 40 ரன்களாக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், 48 ரன்கள் இலக்காக மாற்றப்பட்டது. இப்படிப்பட்ட, ‘டக்வொர்த் –லீவிஸ்’ விதியை  புரிந்து கொள்ள முடியவில்லை.

இவ்வாறு கோஹ்லி கூறினார்

ராஞ்சி ரசிகர்களுக்கு ஏமாற்றமா

முதல் போட்டி நடந்த ராஞ்சியில் உள்ளூர் ரசிகர்கள் முன், இந்திய வீரர் தோனி, களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மழை காரணமாக இலக்கு மாற்றப்பட்டதால் தோனி ‘பேட்டிங்’ செய்யவில்லை. 

இது குறித்து இந்தியாவின் தவான் கூறுகையில்,‘‘ ராஞ்சியில் தோனி களமிறங்காதது, உள்ளூர் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்திருக்கும். ஆனால், இந்திய அணி வெற்றி பெற்றது இவர்களுக்கு மகிழ்ச்சி தந்திருக்கும். தற்போதைய அணியில், இளம் வீரர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.இதனால், இந்திய அணி பலம் அடைந்துள்ளது. சர்வதேச வீரர்களுடன் விளையாடிய அனுபவம் ஐ.பி.எல்., தொடரில் கிடைத்தது. இது, இளம் நட்சத்திரங்களுக்கு உதவியாக அமைந்தது,’’ என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?