Advertisement


சிமோனா ஹாலப் ‘நம்பர்–1’

அக்டோபர் 07, 2017.
 Comments  
 


Simona Halep, Romania, China Open Tennis
 

பீஜிங்: சிமோனா ஹாலப் முதல் முறையாக ‘நம்பர்–1’ இடத்திற்கு முன்னேறினார்.

ருமேனயாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலப், 26. கிராண்ட்ஸ்லாம் அரங்கில் அதிகபட்சமாக இரு முறை (பிரெஞ்ச் ஓபன்– 2014, 17) பைனலுக்கு முன்னேறினார்.

தற்போது, பீஜிங்கில் நடக்கும் சீன ஓபன் அரையிறுதியில் சிமோனா, 6–2, 6–4 என லாட்வியாவின் ஜெலினாவை வீழ்த்தினார். இதன் மூலம் ரேங்கிங் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு முன்னேறினார். ருமேனிய வீராங்கனை ஒருவர் முதலிடத்தை எட்டியது இதுவே முதல் முறை. ஒட்டுமொத்தமாக, ‘நம்பர்–1’ இடம் பிடித்த 25வது வீராங்கனை ஆனார். ஸ்பெயினின் முகுருஜா இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதற்கான, அதிகாரப்பூர்வ ‘ரேங்கிங்’ பட்டியல் நாளை வெளியிடப்படும். 

இது குறித்து சிமோனா ஹாலப் கூறுகையில்,‘‘ தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியது வியப்பாக உள்ளது. பயிற்சியாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இந்த நாள் ‘ஸ்பெஷலாக’ அமைந்துள்ளது,’’ என்றார். 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?