Advertisement


கோப்பை வென்றது தென் ஆப்ரிக்கா: வங்கதேசம் இன்னிங்ஸ் தோல்வி

அக்டோபர் 06, 2017.
 Comments  
 


South Africa, Bangladesh, Test Cricket, Rabada
 

புளோயம்போன்டைன்: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இன்னிங்ஸ் மற்றும் 254 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்ரிக்கா, 2–0 என தொடரை முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது. இரண்டாவது டெஸ்ட், புளோயம்போன்டைனில் நடந்தது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 573/4 (‘டிக்ளேர்’), வங்கதேசம் 147 (‘பாலோ–ஆன்’) ரன்கள் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் வங்கதேச அணி, விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்திருந்தது.

ரபாடா அசத்தல்: மூன்றாம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வங்கதேச அணிக்கு ரபாடா மீண்டும் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ சவுமியா சர்கார் (3), மோமினுல் ஹக் (11) அவுட்டாகினர். இம்ருல் கெய்ஸ் (32), கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் (26) நிலைக்கவில்லை. மகமதுல்லா (43) ஆறுதல் தந்தார். லிட்டன் தாஸ் (18), சபிர் ரஹ்மான் (4) ஏமாற்றினர். ரபாடா பந்தில் தைஜுல் இஸ்லாம் (2), ருபெல் ஹொசைன் (7) போல்டாகினர். முஷ்தபிஜுர் ரஹ்மான் (7) ஏமாற்றினார்.

இரண்டாவது இன்னிங்சில் வங்கதேச அணி 172 ரன்களுக்கு சுருண்டு, இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட் கைப்பற்றினார். இவர், இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 10 (5+5) விக்கெட் வீழ்த்தினார்.

சிறந்த வெற்றி

வங்கதேச அணியை இன்னிங்ஸ் மற்றும் 254 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்ரிக்கா, டெஸ்ட் அரங்கில் தனது சிறந்த இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன், 2001ல் கேப்டவுனில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 229 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது, சிறந்த இன்னிங்ஸ் வெற்றியாக இருந்தது.

முஷ்பிகுர் ரஹிம் காயம்

நேற்று, தென் ஆப்ரிக்காவின் ஆலிவியர் வீசிய ‘பவுன்சர்’ பந்து,  வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிமின் ‘ஹெல்மெட்டில்’ பலமாக தாக்கியதில் நிலைகுலைந்தார். உடனடியாக இவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்திற்கு பின், இயல்பு நிலைக்கு திரும்பினார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?