Advertisement


ரஞ்சி: தமிழகம் ‘டிரா’

அக்டோபர் 06, 2017.
 Comments  
 


Ranji Trophy Cricket, Tamil Nadu, Andhra, Abhinav Mukund
 

சென்னை: தமிழகம், ஆந்திரா அணிகள் மோதிய ரஞ்சி கோப்பை லீக் போட்டி ‘டிரா’ ஆனது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 84வது ‘சீசன்’, நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. இதில் தமிழகம், ராஜஸ்தான், ‘நடப்பு சாம்பியன்’ குஜராத் உள்ளிட்ட 28 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ‘சி’ பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ஆந்திரா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் தமிழகம் 176, ஆந்திரா 309 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில் தமிழக அணி 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று, 4ம் நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த தமிழக அணி கேப்டன் அபினவ் முகுந்த் (95) சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். அஷ்வின் (15), வாஷிங்டன் சுந்தர் (20) ஏமாற்றினர். கணுக்கால் காயத்தில் இருந்து மீண்ட துவக்க வீரர் முரளி விஜய் (55), அரைசதமடித்தார். மறுமுனையில் அசத்திய பாபா அபராஜித் சதம் கடந்தார்.

இரண்டாவது இன்னிங்சில் தமிழக அணி, 6 விக்கெட்டுக்கு 350 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. அபராஜித் (108), ஜெகதீசன் (20) அவுட்டாகாமல் இருந்தனர்.

பின், 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய ஆந்திர அணிக்கு ஸ்ரீகர் பாரத் (64), ரிக்கி புய் (40) நம்பிக்கை தந்தனர். நான்காம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் ஆந்திர அணி 7 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து இப்போட்டி ‘டிரா’ என அறிவிக்கப்பட்டது.

முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலை அடிப்படையில் ஆந்திராவுக்கு 3 புள்ளி வழங்கப்பட்டது. தமிழக அணி ஒரு புள்ளி பெற்றது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?