Advertisement


இந்திய அணி அசத்தல் வெற்றி: பவுலர்கள் மீண்டும் ஆதிக்கம்

அக்டோபர் 06, 2017.
 Comments [2]  
 


India, Australia, T20 Cricket, Ranchi
 

ராஞ்சி: மழையால் பாதிக்கப்பட்ட, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ‘டுவென்டி–20’ போட்டியில், ‘டக்வொர்த்–லீவிஸ்’ விதிப்படி, இந்திய அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய முதல் போட்டி நேற்று, தோனியின் சொந்தமண்ணான ராஞ்சியில் நடந்தது.

ஸ்மித் விலகல்: காயம் காரணமாக ஸ்டீவ் ஸ்மித் விலக, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பை டேவிட் வார்னர் ஏற்றார். ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பீல்டிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், பின்ச் ஜோடி துவக்கம் கொடுத்தது. போட்டியின் முதல் ஓவரை வீசினார் புவனேஷ்வர். 3, 4 வது பந்துகளில் பவுண்டரி அடித்தார் வார்னர். 5வது பந்தில் வார்னர் (8) போல்டானார். மேக்ஸ்வெல் (17), மீண்டும் ஒரு முறை சகாலிடமே வீழ்ந்தார்.

சபாஷ் குல்தீப்: பின்ச், 30 பந்தில் 42 ரன்கள் எடுத்து, ‘சைனா மேன்’ பவுலர் குல்தீப் ‘சுழலில்’ சிக்கினார். தொடர்ந்து அசத்திய இவர், அடுத்த சில நிமிடத்தில் ஹென்ரிக்சை (8) போல்டாக்கினார். டிராவிஸ் ஹெட் (9) ஏமாற்றினார்.

நழுவிய ‘மூன்று’: போட்டியின் 15வது ஓவரை வீசினார் சகால். இதன் முதல் பந்தில் பெய்ன் கொடுத்த ‘கேட்ச்சை’ நழுவவிட்டார் சகால். 5வது பந்தில் பெய்னுக்கு கிடைத்த ‘ஸ்டம்பிங்’ வாய்ப்பை கோட்டை விட்டார் தோனி. தொடர்ந்து அடுத்த பந்தில் இவர் கொடுத்த எளிய ‘கேட்ச்சை’, புவனேஷ்வர் கோட்டை விட்டார்.

பும்ரா ‘சூப்பர்’: ஒரே ஓவரில்  கிடைத்த மூன்று வாய்ப்புகளையும் நமது வீரர்கள் வீணடிக்க, ரசிகர்கள் வெறுத்து போயினர். ஒருவழியாக பெய்னை (17), போல்டாக்கினார் பும்ரா. தொடர்ந்து இதே ஓவரில் கூல்டர் நைலையும் (1), பும்ரா போல்டாக்கினார். கிறிஸ்டியன் (9), ரன் அவுட்டானார். ஆஸ்திரேலிய அணி 18.4 ஓனரில் 8 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்த போது, மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. இந்தியா சார்பில் பும்ரா, குல்தீப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

6 ஓவர், 48 ரன்: பின் மழை நின்றதும், ‘டக்வொர்த்–லீவிஸ்’ விதிப்படி இந்தியாவுக்கு 6 ஓவரில் 48 ரன்கள் வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. துவக்க வீரராக வந்த ரோகித் சர்மா (11), கூல்டர் நைல் ‘வேகத்தில்’ போல்டானார். ஆன்ட்ரூ டை, கூல்டர் நைல் பந்துகளில் தவான், பவுண்டரி அடிக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டன. கிறிஸ்டியன் வீசிய இந்த ஓவரில் முதல் பந்தில் தவான் 1 ரன் எடுத்தார். 2வது பந்தில், 2 ரன் எடுத்தார் கோஹ்லி. அடுத்த பந்தில் இவர் ஒரு ‘சூப்பர்’ பவுண்டரி அடிக்க, இந்திய அணி 5.3 ஓவரில், 1 விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்தது. ‘டக்வொர்த்–லீவிஸ்’ விதிப்படி இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோஹ்லி (22), தவான் (15) அவுட்டாகாமல் இருந்தனர். 

7வது வெற்றி

ராஞ்சி போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, தொடர்ந்து 7வது வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன், வங்கதேச அணிக்கு எதிராக பாகிஸ்தான் (2007–2014), நியூசிலாந்து (2010–2017) அணிகள், இதுபோல, தொடர்ந்து 7 ‘டுவென்டி–20’ போட்டியில் வென்றன. இவ்வரிசையில் ஜிம்பாப்வேக்கு எதிராக பாகிஸ்தான் அணி (2008–2015) தொடர்ந்து 9 போட்டியில் வென்றது தான் முதலிடத்தில் உள்ளது.

★ தோனி அணியும் ‘ஜெர்சி’ எண் ‘7’. இந்நிலையில் அக்., 7ம் தேதியான நேற்று, அவரது சொந்தமண்ணில் (ராஞ்சி), ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, இந்திய அணி தொடர்ந்து, 7 ‘டுவென்டி–20’ வெற்றியை பெற்றது ‘ஸ்பெஷல்’ தான்.

ஐந்தாவது முறை

ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல், இந்திய ‘சுழல்’ வீரர் சகாலிடம் சிக்குவது தொடர்கிறது. ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடும் சகால் பந்தில், பஞ்சாப் வீரர் மேக்ஸ்வெல் (மே 5, லீக் சுற்று) முதலில் அவுட்டானார். 

பின், இந்தியாவுக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டியிலும், மேக்ஸ்வெல், சகால் ‘சுழலில்’ சிக்க, 4, 5வது போட்டியில் களமிறக்கப்படவில்லை.

நேற்று ‘டுவென்டி–20’ போட்டியில் களமிறங்கிய இவரை, மீண்டும் சகால் அவுட்டாக்கினார். அதாவது இந்திய மண்ணில் விளையாடிய 5 போட்டிகளிலும் சகால் வலையில் சிக்கியுள்ளார்.

நெஹ்ராவை முந்திய பும்ரா

சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் நெஹ்ராவை (26 போட்டி, 34 விக்.,) முந்தி, இரண்டாவது இடம் பிடித்தார் பும்ரா (25 போட்டியில் 36 விக்.,). முதலிடத்தில் அஷ்வின் (46ல் 52 விக்.,) உள்ளார்.

முதன்முறை

நேற்று ஆஸ்திரேலிய அணியின் 6 பேட்ஸ்மேன்கள் ‘போல்டாகி’ திரும்பினர். ‘டுவென்டி–20’ கிரிக்கெட்டில் இது போல ஐந்தாவது முறையாக நடந்தது. அதேநேரம், இந்திய பவுலர்கள் இதுபோல செயல்பட்டது இது தான் முதன் முறை.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்


Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?