Advertisement


லட்சம் கனவு கண்ணோடு உறுதியோடு போராடு...

அக்டோபர் 01, 2017.
 Comments  
 


mithali
 

‘‘ கனவுகள், லட்சியங்கள் உங்களுடையது. இதை யாரும் பறித்து விட முடியாது,’’ என, கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்தார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ், 34. ஒருநாள் அரங்கில் 6,000 ரன்கள் எடுத்த முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்தவர். உலக கோப்பை பைனலுக்கு, அணியை அழைத்துச் சென்றதும் மிக பிரபலமானார். சமீபத்தில் தனது தோழிகளுடன் எடுத்த கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். பின், பிரபல ஆங்கில பத்திரிகை சார்பில் ‘சிறந்த பெண்’ ஆக தேர்வான இவர், அட்டைப் படத்திலும் இடம் பிடித்து அசத்தினார்.

மிதாலி ராஜ் அளித்த பேட்டி:

* நீங்கள் சிறப்பாக நடனம் ஆடுவீர்களாமே?

துவக்கத்தில் பரதம், கிரிக்கெட் என, இரண்டையும்  தேர்வு செய்தேன்.  கிரிக்கெட்டில் இருந்து முன்னதாக ஓய்வு பெற்றால், நடனத்தை தொடரலாம் என திட்டமிட்டேன். ஆனால், கிரிக்கெட் இப்போது வரையிலும் தொடர்வதால், இப்போதைக்கு நடனம் கிடையாது.

*  தோழி கோஸ்வாமி குறித்து?

கடந்த 1999ல் அறிமுகம் ஆனேன். கோஸ்வாமி 2002ல் வந்தார். வேகப்பந்து வீச்சாளராக இருந்து இவ்வளவு காலம் நீடிப்பது அவ்வளவு எளிதல்ல. பல்வேறு சவால்களை சந்தித்துள்ளார். எங்களுக்கு இடையில் நல்ல நட்பு உள்ளது. ஓய்வுக்குப் பின்னும் இது தொடரும்.

* செய்னா, சிந்து, சானியா மிர்சா என, யாரையாவது பின்பற்றுகிறீர்களா?

பொதுவாக எந்தவித விளையாட்டு அல்லது நட்சத்திரங்களை பின் பற்றுவது இல்லை. தேசத்துக்காக அவர்கள் கொண்டு வந்த வெற்றிகள், சாதனைகளை தொடர்ந்து நினைவில் வைத்திருப்பேன்.

* சிறு வயதில் தந்தை, சகோதரருடன் விளையாடிய அனுபவம் எப்படி குறித்து...?

பழைய நினைவுகள் எப்போதும் இனிமையானவை. ஓய்வுக்குப் பின் அப்பா விளையாடுவதை நிறுத்தி விட்டார். மாறாக, தொடர்ந்து கிரிக்கெட் விளையாட ஊக்கம் தருகிறார். இதேபோல, எனது குடும்பத்தினரும் முழு அளவில் ஆதரவு தந்தனர். இப்போதும் இது தொடர்கிறது. இதுபோன்ற ஆதரவான பெற்றோர்கள் எல்லோருக்கும் கிடைத்து விடாது.

* கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை தேர்வு செய்யும் எதிர்கால பெண்களுக்கு உங்கள் ‘அட்வைஸ்’ என்ன?

விளையாட்டு தான் உங்கள் கனவு எனில், அதை அடைய போராட வேண்டும். நீங்கள் காணும் கனவுகள், லட்சியங்கள் உங்களுடையது. யாரும் இதை உங்களிடம் இருந்து பறித்து விட முடியாது. கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?