Advertisement


சைக்கிள் பந்தயம்: பீட்டர் பிரமாதம்

அக்டோபர் 01, 2017.
 Comments  
 


world cycle championships
 

நார்வேயில் உள்ள பெர்ஜென் நகரில் உலக கோப்பை சைக்கிள் சாம்பியன்ஷிப் நடந்தது. இதில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா என பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் சுலோவாகியாவின் பீட்டர் சாகன் சீறிப்பாய்ந்தார். 267.5 கி.மீ., கொண்ட பந்தய துாரத்தை 6 மணி நேரம் 28:11 நிமிடத்தில் கடந்த இவர் கோப்பை வென்றார். இது, தொடர்ந்து இவர் வென்ற மூன்றாவது பட்டம். வெள்ளி, வெண்கலம் முறையே நார்வேயின் அலெக்சாண்டர், ஆஸ்திரேலியாவின் மைக்கேல் மாத்யூஸ் பெற்றனர். 

கால்பந்து: வட கொரியா சாம்பியன்

பெண்களுக்கான (16 வயதுக்குட்பட்டோர்) ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தாய்லாந்தில் நடந்தது. இதில் ஜப்பான், வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன. கோகன்பூரி பகுதியில் நடந்த பைனலில் வட கொரியா, தென் கொரியா அணிகள் மோதின. இரு நாடுகளுக்கும் இடையே அடிக்கடி உரசல் ஏற்படுவதால், விறுவிறுப்பாக இருந்தது. வட கொரியா சார்பில், கிம் கியாங் (38வது நிமிடம்), சூ ஜோங் (87) தலா ஒரு கோல் அடித்தனர். எதிரணி பதிலடி தர திணற, வட கொரியா அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி வெற்றது. 

ஸ்னுாக்கர்: சீன வீரர் அசத்தல்

சீனாவில் உள்ள யூசான் பகுதியில் உலக ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் நடந்தது. இங்கிலாந்தின் மார்க், ஸ்காட்லாந்தின் ஆண்டனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விறுவிறுப்பான பைனலில் சீனாவின் டிங் ஜூன்ஹுய், இங்கிலாந்தின் கெய்ரன் வில்சனை எதிர் கொண்டார். உள்ளூர் மண்ணில் ஜூன்ஹூய் நுணுக்கமாக செயல்பட்டார். இவருக்கு இங்கிலாந்து வீரர் ஈடுகொடுக்க திணறினார். முடிவில், டிங் ஜூன்ஹூய் 10–3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 

துடுப்புப்படகு: சுலோவாகியா தங்கம் 

பிரான்சில் உள்ள பாவு பகுதியில் உலக கோப்பை துடுப்புப்படகு சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் ஆண்கள் அணிகளுக்கான கேனோ பிரிவில் சுலோவாகியா சார்பில் மாடிஜ், அலெக்சாண்டர், மைக்கேல் பங்கேற்றனர். அபாரமாக செயல்பட்ட சுலோவாகியா அணி தங்கம் வென்றது. வெள்ளியை ரியான், டேவிட், ஆடம் அடங்கிய பிரிட்டன் வென்றது. டேனிஷ், மார்டின், எடிர்ன் அடங்கிய பிரான்ஸ் வெண்கலம் கைப்பற்றியது. 

டிரையத்லான்: ஜெர்மனி வீரருக்கு ஜெயம் 

உலக டிரையத்லான் தொடரின் 10வது ‘சீசன்’ ஸ்பெயினில் உள்ள ஹுலவ் பகுதியில் நடந்தது. இது, நீச்சல், சைக்கிள் பந்தயம், ஓட்டம் என மூன்று வகையான பிரிவுகள் அடங்கியது. இதில் கனடாவின் கார்டன், பிரிட்டனின் மார்க் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மூன்று பிரிவிலும் ஜொலித்த ஜெர்மனி வீரர் ஜஸ்டஸ் ஒரு மணி நேரம் 45:46 நிமிடத்தில் கடந்து கோப்பை வென்றார். அடுத்த இரு இடங்கள் முறையே அமெரிக்காவின் கெவின், ஸ்பெயினின் யுசியோ பெற்றனர்.

* இதன் பெண்கள் பிரிவில் செக் குடியரசின் வென்ட்லா பிரின்டோவா சாம்பியன் பட்டத்தை தட்டிசென்றார்.

மோட்டார் பந்தயம்: சீறினார் மார்க்

ஸ்பெயினில் உள்ள ஆராகான் பகுதியில் சர்வதேச மோட்டார்சைக்கிள் கிராண்ட்பிரிக்ஸ் நடந்தது. இதன் ‘மோட்டோ ஜிபி’ பிரிவில் இத்தாலியின் ஆண்ட்ரியா, பிரான்சின் ஜோகன் உள்ளிட்ட பல நாட்டை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். மொத்தம் 166.3 கி.மீ., துாரம் கொண்ட இலக்கை ஹோண்டா அணியின் ஸ்பெயின் வீரர் மார்க் மார்கஸ் 42:06 நிமிடத்தில் கடந்தார். இதன் மூலம், முதலிடத்துடன் கோப்பையை வசப்படுத்தினார். அடுத்த இரு இடங்களை ஸ்பெயினின் டேனி, சக வீரரான ஜார்ஜ் பிடித்தனர்.

ஸ்குவாஷ்: முல்லர் முதலிடம்

அமெரிக்காவின் வெர்ஜினியா பகுதியில் ஆண்களுக்கான சர்வதேச ஸ்குவாஷ் ஓபன் தொடர் நடந்தது. இதன் பைனலில் சுவிட்சர்லாந்தின் நிக்கோலஸ் முல்லர், ஸ்காட்லாந்தின் கிரேக்கை சந்தித்தார். முதல் செட்டை 6–11 என இழந்த முல்லர், பின் எழுச்சி கண்டார். அடுத்த மூன்று செட்டையும் 11–5, 11–7, 11–5 என வசப்படுத்தி அசத்தினார். 47 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், முல்லர் 6–11, 11–5, 11–7, 11–5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார்.

மாரத்தான்: கென்ய வீரர் ஆதிக்கம் 

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் சர்வதேச மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் ஜப்பானின் ஷிடாரா, ஆஸ்திரேலியாவின் ஆடம்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், வழக்கம்போல கென்ய நட்சத்திரங்களே ஆதிக்கம் செலுத்தினர். 42.195 கி.மீ., கொண்ட பந்தய துாரத்தை கென்ய வீரர் எலய்டு கிப்சாகி இரண்டு மணி நேரம் 3:32 நிமிடத்தில் கடந்து பட்டம் வென்றார். அடுத்த இரு இடங்களை எத்தியோப்பியாவின் அடுலா, மோசினட் பிடித்தனர். 

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?