Advertisement


லுாசி சபரோவா விலகல்

செப்டம்பர் 29, 2017.
 Comments  
 


Lucie Safarova
 

பீஜிங்: சீன ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து காயம் காரணமாக செக்குடியரசு வீராங்கனை லுாசி சபரோவா விலகினார்.

சீனாவில் உள்ள பீஜிங் நகரில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., அந்தஸ்து பெற்ற சீன ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு போட்டிகளில் இருந்து செக்குடிரசின் லுாசி சபரவோவா, மணிக்கட்டுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் விலகினார். இரட்டையர் பிரிவு தரவரிசையில் ‘நம்பர்–1’ இடத்தில் உள்ள இவர், இக்காயத்தால் சீனாவில் நடக்கும் உகான் ஓபன் தொடரில் இருந்து விலகினார். ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இவர், 29வது இடத்தில் உள்ளார்.

இதனையடுத்து சபரோவா, வரும் அக். 2ல் வெளியாகவுள்ள டபிள்யு.டி.ஏ., இரட்டையர் பிரிவு தரவரிசையில் முதலிடத்தை இழக்க உள்ளார். சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ், ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேற உள்ளார்.

இதுகுறித்து சபரோவா கூறுகையில், ‘‘மணிக்கட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தினால், இந்த ஆண்டு நடக்கவுள்ள சீன ஓபனில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் வருத்தமளிக்கிறது,’’ என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?