Advertisement


ரோகித், பாண்ட்யா விளாசல்: தொடரை வென்றது இந்தியா

செப்டம்பர் 23, 2017.
 Comments  
 


India, Australia, Indore, One Day Cricket
 

இந்துார்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் ரோகித், ரகானே, பாண்ட்யா அரை சதம் விளாசினர். இவர்களின் அபார ஆட்டம் கைகொடுக்க இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்தியா 2–0 என முன்னிலை வகித்தது. மூன்றாவது போட்டி ம.பி.,யில் உள்ள இந்துாரில் நடந்தது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் கார்ட்ரைட், மாத்யூ வேட் நீக்கப்பட்டு ஆரோன் பின்ச், ஹேண்ட்ஸ்கோம்ப் வாய்ப்பு பெற்றனர். ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். 

பின்ச் விளாசல்:

ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், ஆரோன் பின்ச் ஜோடி துவக்கம் தந்தது. பாண்ட்யா பந்தில் வார்னர் (42) போல்டானார். இந்திய பந்துவீச்சை விளாசிய பின்ச், ஒரு நாள் அரங்கில் 8வது சதம் எட்டினார். ஸ்மித் அரை சதம் கடந்தார். 

விக்கெட் சரிவு:

குல்தீப் ‘சுழலில்’ பின்ச் (124) ஆட்டமிழந்தார். ஸ்மித் 63 ரன்களில் அவுட்டானார். இதன்பின், விக்கெட் அடுத்தடுத்து சரிந்தது. சகால் பந்தில் மேக்ஸ்வெல் (5) சிக்கினார். டிராவிஸ் ஹெட் (4), ஹேண்ட்ஸ்கோம்ப் (3) ஒற்றை இலக்கில் திரும்பினர். முடிவில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 293 ரன்கள் எடுத்தது. ஸ்டாய்னிஸ் (27), ஆஷ்டன் ஏகார் (9) அவுட்டாகாமல் இருந்தனர். 

ரோகித் அரை சதம்:

பின், களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித், ரகானே ஜோடி அதிரடி துவக்கம் தந்தது. கூல்டர் பந்தை ரகானே பவுண்டரிக்கு விரட்டினார். தன் பங்கிற்கு, ரிச்சர்டசன் பந்தை ரோகித் சிக்சருக்கு பறக்கவிட்டார். இருவரும் அரை சதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்தபோது, ரோகித் (71) ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் பந்தில் ரகானே (70) அவுட்டானார்.

பாண்ட்யா விளாசல்:

கேப்டன் கோஹ்லி 28 ரன்களில் வெளியேறினார். ஜாதவ் (2) ஏமாற்றினார். வேகமாக ரன் சேர்த்த பாண்ட்யா (78) அரை சதம் அடித்தார். மணிஷ் பாண்டே கைகொடுக்க, இந்திய அணி 47.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாண்டே (36), தோனி (3) அவுட்டாகாமல் இருந்தனர். 

இதன் மூலம், இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி 3–0 என தொடரை கைப்பற்றியது. நான்காவது போட்டி வரும் 28ல் பெங்களூருவில் நடக்கவுள்ளது.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?