Advertisement


பயஸ் ஜோடி தோல்வி

செப்டம்பர் 21, 2017.
 Comments  
 


St Petersburg Open Tennis, Paes, Purav Raja
 

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பயஸ், புரவ் ராஜா ஜோடி தோல்வியடைந்தது.

ரஷ்யாவில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், புரவ் ராஜா ஜோடி, 6–4, 6–2 என நியூசிலாந்தின் மார்கஸ் டேனியல், பிரேசிலின் மார்சிலோ டெமோலினர் ஜோடியை வீழ்த்தியது.

பின், அரையிறுதியில் பயஸ், புரவ் ராஜா ஜோடி, சிலியின் ஜூலியோ பெரால்டா, அர்ஜென்டினாவின் ஹொராசியோ ஜிபாலோஸ் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 6–4 எனக் கைப்பற்றிய பயஸ் ஜோடி, 2வது செட்டை 3–6 என இழந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் ‘சூப்பர் டைபிரேக்கர்’ சுற்றில் ஏமாற்றிய இந்திய ஜோடி 7–10 எனக் கோட்டைவிட்டது. முடிவில் பயஸ், புரவ் ராஜா ஜோடி 6–4, 3–6, 7–10 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?