Advertisement


அன்பென்றாலே அம்மா...செரினா உருக்கம்

செப்டம்பர் 20, 2017.
 Comments  
 


Serena Williams
 

நியூயார்க்: டென்னிஸ் நட்சத்திரம் செரினா, தனது தாயாருக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார். 

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா, 35. ‘ஓபன் எராவில்’ அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் (23) வென்ற வீராங்கனை என்ற பெருமை பெற்றவர். இப்படி டென்னிசில் ஆதிக்கம் செலுத்தினாலும், கறுப்பினத்தை சேர்ந்த இவர் நிறம் மற்றும் உடல் அமைப்பு காரணமாக  பல விமர்சனங்களை சந்தித்தார். இதை தாண்டி சாதித்துள்ள செரினாவுக்கு, சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தனது தாயார் ஒராசெனேவுக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார். இதை, சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 

இதன் விவரம்:

எனது தாயாரான நீங்கள்தான், உலகிலேயே வலிமையான பெண். நான் பிறந்தபோது, வலிமையான தோள்கள், தசைகளுடன்தான் இருந்திருப்பேன். இதனால், பல எதிர்ப்புகளை எதிர் கொண்டேன். பெண்கள் பிரிவில் விளையாடக்கூடாது. உடல் அளவில் பலசாலியாக இருந்ததால் என்னை ஆண் என்று கேலி செய்தனர். போதை மருந்து உட்கொள்கிறேனா என்றும் விமர்சனம் செய்தனர். என்னை வெறுத்தவர்கள், கறுப்பின பெண்ணின் வலிமையை அறியவில்லை.

‘ரோல் மாடல்’:

உங்களைப்பார்த்துதான் நான் இந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றேன். நீங்கள்தான் எனக்கு ‘ரோல் மாடலாக’ இருந்தீர்கள். தற்போது, எனக்கு பிறந்துள்ள மகளும் வலிமையான தசை, தோள்களுடன் இருக்கிறாள். என்னைப்போன்ற விமர்சனத்தை இவளும் சந்திக்கலாம். இதை, இவளின் தாயான நான் எப்படி சமாளிக்கப்போகிறேன் எனத்தெரியவில்லை. எனக்கு தொடர்ந்து உதவியாக இருப்பேன் என உறுதி தாருங்கள். உங்கள் மீது எப்போதும் அளவில்லாத அன்புடன் இருப்பேன்.

இவ்வாறு  செரினா உருக்கத்துடன் எழுதி உள்ளார். 

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?