Advertisement


கிளப் கால்பந்து: பெங்களூரு அபாரம்

செப்டம்பர் 13, 2017.
 Comments  
 


AFC Soccer, Bangaluru FC
 

பியாங்யங்: ஆசிய கிளப் கூட்டமைப்பு நாடுகளின் (ஏ.எப்.சி.,) சார்பில் 14வது ஏ.எப்.சி., கோப்பை தொடர் நடக்கிறது. இதில் கடந்த ஆண்டு பைனலுக்கு முன்னேறிய இந்தியாவின் பெங்களூரு அணி, இந்த ஆண்டும் அசத்துகிறது. இதன் முதல் சுற்றில் பெங்களூரு அணி 3–0 என, வட கொரியாவின் வலிமையான 4.25 எஸ்.சி., என்ற ஏப்ரல் 25 அணியை வென்றது.

நேற்று நடந்த இரண்டாவது சுற்று அரையிறுதியில் இரு அணிகள் மீண்டும் மோதின. இப்போட்டி வட கொரியாவின், 1.14 லட்சம் மே மைதானத்தில் நடந்தது. இம்மண்ணில் பங்கேற்ற முதல் இந்திய கிளப் அணி என்ற பெருமையும் பெங்களூருவுக்கு கிடைத்தது. இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியிலும் இரு அணி தரப்பிலும் கோல் அடிக்கப்படவில்லை. முடிவில், போட்டி ‘டிரா’ (0–0) ஆனது. இருப்பினும், ஒட்டுமொத்த கோல் அடிப்படையில் (3–0), பெங்களூரு அணி, மண்டல அளவிலான பைனலுக்கு முன்னேறியது.

இதில் தஜிகிஸ்தானின் இஸ்டிக்லல் அணியை  (செப்., 27, அக்., 18) சந்திக்கிறது. இதில் வெல்லும் பட்சத்தில், கடந்த ஆண்டு போல, மீண்டும் ஏ.எப்.சி., தொடரின் பைனலுக்கு (நவ., 4) தகுதி பெறலாம். 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?