Advertisement


மெஸ்சி அசத்தல்: பார்சிலோனா வெற்றி

செப்டம்பர் 13, 2017.
 Comments  
 


Champions League Soccer, Barcelona, Messi
 

பார்சிலோனா: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மெஸ்சி அசத்த, பார்சிலோனா அணி வெற்றி பெற்றது.

ஐரோப்பாவில் கிளப் அணிகளுக்கு இடையில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. பார்சிலோனாவில் நடந்த லீக் போட்டியில் யுவான்டாஸ், பார்சிலோனா அணிகள் மோதின. இதன் 45வது நிமிடத்தில் பார்சிலோனாவின் நட்சத்திர வீரர் மெஸ்சி முதல் கோல் அடித்தார். தன் பங்கிற்கு ராக்டிக் (56வது நிமிடம்) பந்தை வலைக்குள் அனுப்ப பார்சிலோனா வலுப்பெற்றது. மீண்டும் மெஸ்சி (69வது நிமிடம்) அசத்தினார். இதற்கு, எதிரணி சார்பில் எவ்வித பதிலடியும் தரப்படவில்லை. முடிவில், பார்சிலோனா அணி 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இது சரியா நெய்மர்: கிளாஸ்கோவில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் நெய்மர் அடங்கிய பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 5–0 என செல்டிக் அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் நெய்மர், எதிரணியின் ரால்ஸ்டன் இடையே அவ்வப்போது உரசல் ஏற்பட்டது. இதை மனதில் வைத்திருந்த நெய்மர், போட்டி முடிந்ததும் ரால்ஸ்டனுடன் கைகுலுக்க மறுத்துவிட்டார். நெய்மரின் இந்த செயலுக்கு சமூகவலைதளத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?