Advertisement


‘குரு’ தோனி...‘நண்பர்’ கோஹ்லி *உற்சாகத்தில் சகால்

செப்டம்பர் 12, 2017.
 Comments [2]  
 


Virat Kohli the Friend and MS Dhoni the Mentor Behind My Success Yuzvendra Chahal
 

புதுடில்லி: ‘‘இந்திய அணி கேப்டன் கோஹ்லி எனக்கு நண்பர், தோனி சிறந்த குரு. இவர்கள் தான் எனது வெற்றிக்கு காரணம்,’’ என, இந்திய ‘சுழல்’ வீரர் சகால் தெரிவித்தார்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சகால், 27. இதுவரை 7 ஒருநாள், 7 ‘டுவென்டி–20’ போட்டிகளில் மட்டும் பங்கேற்றுள்ளார். இருப்பினும், இவர் மீதுள்ள நம்பிக்கை காரணமாக, ‘சீனியர்கள்’ அஷ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுத்து விட்டு, ஆஸ்திரேலிய தொடரில் தேர்வு செய்துள்ளனர்.

இதுகுறித்து சகால் கூறியது:

பொதுவாக பெரியளவில் பிரபலம் அடைய வேண்டும் என்றால், யாராவது ஒருவர் சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும். இவ்விஷயத்தில் நான் மிகவும் அதிர்ஷ்டக்காரன்.

ஏனெனில் எனக்கு கோஹ்லி, தோனி என, இருவர் உள்ளனர். இதில், கோஹ்லி சிறந்த நண்பனை போல, தொடர்ந்து என் மீது நம்பிக்கை வைத்துள்ளார். எனது திட்டங்களை செயல்படுத்த பெரிதும் உதவியாக உள்ளார்.

தோனியை பொறுத்தவரையில் எனது ஆலோசகர் போல. எனக்கு எந்த நேரத்தில், எவ்வித சந்தேகம் ஏற்பட்டாலும், உடனடியாக இவரிடம் தான் செல்வேன். ஏனெனில், குறிப்பிட்ட பேட்ஸ்மேன் எப்படி விளையாடுவார், அவருக்கு எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என்ற விஷயம், விக்கெட் கீப்பரான தோனிக்குத் தான் நன்கு தெரியும்.

நம்பிக்கை உள்ளது:

இதனால், போட்டியின் முதல் ஓவர் அல்லது கடைசி ஓவர் என, எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் பவுலிங் செய்யும் நம்பிக்கை வந்துள்ளது. இவர்கள் இருவரது உதவி இல்லை என்றால், இந்தளவுக்கு என்னால் சாதித்து இருக்க முடியாது.

இளம் வீரர்கள் என்னைப் போல சிறப்பாக செயல்பட, இந்த இருவரின் உதவி தான் முக்கிய காரணம். இதற்கு கேப்டனுக்கு கட்டாயம் நன்றி சொல்லியாக வேண்டும். 

காரணம் என்ன:

ஐ.பி.எல்., தொடரில் கோஹ்லியின் பெங்களூரு அணியில் விளையாடுகிறேன். எனது பலம், பலவீனம் குறித்து அவருக்கு நன்கு தெரியும். இதனால், சர்வதேச போட்டிகளில் என்னை எப்படி பயன்படுத்தலாம் என, கோஹ்லி முடிவு செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.

மற்றபடி, இந்திய அணி, ஐ.பி.எல்., என, எதுவாக இருந்தாலும், களத்தில் இறங்கும் போதெல்லாம் முழு அளவில் திறமை வெ ளிப்படுத்தி ஆக வேண்டும். இவ்விஷயத்தில் இரு அணிகளும் ஒன்று என்று தான், நான் நினைக்கிறேன்.

திட்டம் தயார்:

ஆஸ்திரேலிய தொடரில் ஒவ்வொரு வீரர்களுக்கு எதிராகவும் திட்டம் வைத்துள்ளோம். இதுகுறித்து முன்னதாக கூறுவது நன்றாக இருக்காது. எதிரணி எப்படிப்பட்டது என்று கவலைப் படாமல், என்னால் முடிந்த வரை சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்.

இவ்வாறு சகால் கூறினார்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
1   0  
ranjan one week ago | Report abuse
அஸ்வின் ஜடேஜா இல்லாதது ஆஸ்சியுடன் பின்னடைவை உருவாக்கும் இலங்கையுடன் அஸ்ட்ராலியை ஒப்பிட முடியாது


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
1   0  
ragu one week ago | Report abuse
டோனி தா எப்பவுமே சூப்பர் ஹீரோ ... அவருக்கு கீழ எல்லாருமே ஸிரோ ...
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?