Advertisement


பிரியங்காவுக்கு 8 ஆண்டு தடை

செப்டம்பர் 12, 2017.
 Comments  
 


Priyanka Panwar, Asian Games gold winning athlete, faces 8 year ban for doping
 

புதுடில்லி: ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய தொடர் ஓட்ட வீராங்கனை பிரியங்கா பன்வாருக்கு, 8 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. 

உ.பி.,யை சேர்ந்தவர் பிரியங்கா பன்வார், 29. கடந்த 2011ல் தடை செய்யப்பட்ட ‘அனபாலிக் ஸ்டெராய்டு’ என்ற ஊக்கமருந்து பயன்படுத்தி சிக்கியதால், 2 ஆண்டு தடை கிடைத்தது.

இதில் இருந்து 2013ல் மீண்ட இவர், 2014 ஆசிய விளையாட்டுக்கான 4*400 தொடர் ஓட்ட இந்திய அணியில் இடம் பிடித்தார். இன்ச்சானில் (தென் கொரியா) நடந்த இப்போட்டியில் டிண்டு லுகா, பூவம்மா, மன்தீப் கவுருடன் இணைந்து தங்கம் வென்றார்.

இதனிடையே, கடந்த ஆண்டு ஐதராபாத்தில் நடந்த மாநிலங்களுக்கு இடையிலான சாம்பியன்ஷிப் போட்டியில் இவர், ‘மெபென்டர்மைன்’ என்ற ஊக்கமருந்து பயன்படுத்தி சிக்கினார்.

இதையடுத்து, ரியோ ஒலிம்பிக் செல்ல இருந்த பிரியங்காவுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. ஏற்கனவே இதுபோல (2011) சிக்கியதால், தற்போது பிரியங்காவுக்கு, தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையம் (என்.ஏ.டி.ஏ.,) சார்பில், அதிகபட்சமாக 8 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இது கடந்த 2016, ஜூலை முதல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இதனால், ஐதராபாத் போட்டியில் இவர் வென்ற வெண்கலப் பதக்கம் பறிக்கப்படும். தவிர, இவரது தடகள வாழ்க்கையும் ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?