Advertisement


மூணுக்கும் ‘தல’ டுபிளசி

செப்டம்பர் 12, 2017.
 Comments  
 


Du Plessis to lead South Africa in all formats
 

 ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்க அணியின் மூன்றுவித கேப்டனாகவும் டுபிளசி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்கா ‘டுவென்டி–20’ கேப்டனாக டுபிளசி இருந்தார். டிவிலியர்ஸ் காயம் காரணமாக விலகியதால், நியூசிலாந்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இவர் கேப்டன் பொறுப்பை ஏற்றார். இத்தொடரில், தென் ஆப்ரிக்கா வென்று காட்ட, டுபிளசி நிரந்தர கேப்டனாக மாறினார். சமீபத்தில், ஒரு நாள் அணியை வழிநடத்துவதிலிருந்தும் டிவிலியர்ஸ் விலகினார். 

இதனையடுத்து, மூன்றுவிதமான அணிக்கும் கேப்டன் பொறுப்பை டுபிளசி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதை, தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டு (சி.எஸ்.ஏ.,) உறுதி செய்துள்ளது.

சி.எஸ்.ஏ., தலைமை செயல் அதிகாரி ஹாருன் லார்கட் கூறுகையில்,‘‘ உலக கிரிக்கெட் அரங்கில் சிறந்த கேப்டனாக டு பிளசி வலம் வருகிறார். ஒரு நாள் அணியை வழிநடத்திய டிவிலியர்ஸ் விலகியதால், மூன்றுவித அணிக்கும் கேப்டனாக டு பிளசி நியமிக்கப்படுகிறார்,’’ என்றார்.

இம்மாதம், தென் ஆப்ரிக்க மண்ணில் வங்கதேச அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள், 2 ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 28ல் துவங்குகிறது. இத்தொடரில் முதல் முறையாக டுபிளசி மூன்றுவித அணியையும் வழிநடத்த உள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?