Advertisement


கூடைப்பந்து: ஹங்கேரி அபாரம்

செப்டம்பர் 12, 2017.
 Comments  
 


basketball
 

ஹங்கேரியில் உள்ள டிப்ரிசன் நகரில் 18 வயதுக்குட்பட்டோருக்கான ஐரோப்பா கோப்பை கூடைப்பந்து சாம்பியன்ஷிப் நடந்தது. இதில் ஒரு அணியில் 3 பேர் மட்டுமே பங்கேற்பர். இதன் பெண்கள் பிரிவில் பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட அணிகள் மோதின. பைனலில் ஹங்கேரி, ரஷ்யாவை எதிர் கொண்டது. அசாத்திய திறமையை வெளிப்படுத்திய ஹங்கேரி அணி 12–9 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றது.

* ஆண்கள் பிரிவு பைனலில் பெல்ஜியம் அணி 19–13 என்ற கணக்கில் நெதர்லாந்து அணியை தோற்கடித்தது.

வாலிபால்: ரஷ்யா சாம்பியன்

போலந்தில் ஆண்களுக்கான ஐரோப்பிய வாலிபால் சாம்பியன்ஷிப் நடந்தது. பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன. கிராகோ நகரில் நடந்த பைனலில் ரஷ்யா, ஜெர்மனி அணிகள் மோதின. துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஷ்யா 3–2 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வசப்படுத்தியது.

* வெண்கலத்திற்கான போட்டியில் செர்பியா அணி 3–2 என்ற கணக்கில் பெல்ஜியம் அணியை தோற்கடித்தது.

ஹாக்கி: நெதர்லாந்து அசத்தல்

ஸ்பெயினில் ஜூனியருக்கான ‘யூரோ’ தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் நடந்தது. இதன் பெண்கள் பிரிவில் ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் கலந்து கொண்டன. விறுவிறுப்பான பைனலில் பெல்ஜியம், நெதர்லாந்தை சந்தித்தது. துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து அணி 6–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பட்டம் வென்றது.

* ஜெர்மனி அணியை 3–2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இங்கிலாந்து அணி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.

ஜூடோ: ஜப்பான் வீராங்கனைக்கு தங்கம் 

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உலக ஜூடோ சாம்பியன்ஷிப் நடந்தது. இதன் பெண்களுக்கான ‘மிடில் வெயிட்’ 70 கி.கி., எடைப்பிரிவு பைனலில் ஜப்பானின் சியுரு ஆரய், பியுர்டோ ரிகோவின் மரியாவை எதிர் கொண்டார். அசாத்தியமான திறமையை வெளிப்படுத்திய சியுரு 10–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.

* பெண்களுக்கான ‘லைட் வெயிட்’  57 கி.கி., பிரிவு பைனலில் மங்கோலியாவின் சுமாயே 1–0 என ஜப்பானின் யோஷிதாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.

சைக்கிள் பந்தயம்: பீட்டர் பிரமாதம்

தென் ஆப்ரிக்காவில் உள்ள பீட்டர்மாரிட்ஸ்பர்க் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா சைக்கிள் பந்தயம் நடந்தது. இதன் ‘டி–2’ பிரிவில் ஜெர்மனியின் ஹன்ஸ் பீட்டர் டர்ஸ்ட் விடாமுயற்சியுடன் செயல்பட்டார். பந்தய துாரத்தை 27 நிமிடம் 41:14 வினாடியில் கடந்த இவர் முதலிடத்துடன் தங்கம் வென்றார். வெள்ளி, வெண்கலம் முறையே அமெரிக்காவின் ரியான், நியூசிலாந்தின் ஸ்டீபன் ஹில்ஸ் கைப்பற்றினர்.

டிரையத்லான்: நார்வே வீரர் கலக்கல்

உலக டிரையத்லான் தொடரின் 9வது ‘சீசன்’ செக் குடியரசின் கார்லோவ் பகுதியில் நடந்தது. நீச்சல், சைக்கிள் பந்தயம், ஓட்டம் என மூன்று வகையான பிரிவுகள் அடங்கிய இதில் பிரான்சின் மேக்சிம், ஜெர்மனியின் ஜோனாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நார்வே வீரர் கஸ்டவ் பந்தய துாரத்தை 1 மணி நேரம் 49:06 நிமிடத்தில் கடந்து கோப்பை வென்றார். அடுத்த இரு இடங்களை இத்தாலியின் அலெஸ்சான்ட்ரோ, நியூசிலாந்தின் டெய்லர் பிடித்தனர்.

* பெண்கள் பிரிவில் ஆஸ்திரேலியாவின் கிலான் பேக்ஹவுஸ் பட்டத்தை வசப்படுத்தினார். 

டென்னிஸ்: ராபர்டோ சாம்பியன்

இத்தாலியில் உள்ள மனேர்பியோ பகுதியில் ஆண்களுக்கான ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயினின் ராபர்டோ கார்பாலீஸ், சக வீரரான கார்சியோவை சந்தித்தார். துடிப்பாக செயல்பட்ட ராபர்டோ 6–4, 2–6, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றினார்.

* இரட்டையர் பிரிவில் மொனாகோவின் ரோமைன், பிரான்சின் ஹியுகோ பட்டம் வென்றனர்.

ஸ்குவாஷ்: எகிப்து ஆதிக்கம் 

சீனாவின் ஷாங்காய் நகரில் சீன ஓபன் ஸ்குவாஷ் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவு பைனலில் எகிப்தின் ராமி ஆஷர், சக வீரரான பராக்கை சந்தித்தார். இதில் ராமி 11–3, 11–8, 10–12, 2–11, 11–5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார்.

* இதே தொடரின் பெண்கள் பிரிவு பைனலில் எகிப்தின் நுார் 12–10, 11–7, 11–9 என சக வீராங்கனையான கோகரை தோற்கடித்தார்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?