Advertisement


சாகிப்பிற்கு ஓய்வு கிடைத்தது

செப்டம்பர் 11, 2017.
 Comments  
 


Shakib granted short break from Tests
 

தாகா:  வங்கதேச வீரர் சாகிப் அல் ஹசன் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதில் இருந்த விலக்கு தரும் வகையில் சிறிய ஓய்வு தரப்பட்டது.

வங்கதேச அணியின் ‘சீனியர்’ வீரர் சாகிப் அல் ஹசன், 30. சமீபத்திய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், அரைசதம் மற்றும் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு உதவினார். இதுவரை 51 டெஸ்டில் (3,594 ரன், 188 விக்.,) விளையாடியுள்ளார்.

இதனிடையே, தொடர்ச்சியான போட்டிகளால், ஆறு மாதம் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து ஓய்வு வேண்டும் என, வங்கதேச கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.பி.,) கோரிக்கை வைத்தார்.

இதை பி.சி.பி., தற்போது ஏற்றுக் கொண்டது. இதுகுறித்து கிரிக்கெட் விவகாரங்கள் தலைவர் அக்ரம் கான் கூறுகையில்,‘‘ சாகிப் அல் ஹசவுனுக்கு சிறிய ஓய்வு தரப்படுகிறது. இதனால் வரும் தென் ஆப்ரிக்க தொடரில் முதல் டெஸ்டில் இவர் பங்கேற்க மாட்டார். ஒருவேளை இரண்டாவது டெஸ்டில் விளையாட விரும்பினால், முன்னதாக தெரிவிக்க வேண்டும். ஏனெனில், தென் ஆப்ரிக்கா செல்ல தேவையான  ஏற்பாடுகள் செய்ய வேண்டும்,’’ என்றார்.

வங்கதேச கிரிக்கெட்டில் ‘தனக்கு ஓய்வு வேண்டும்’ என்று கேட்டு வாங்கிய முதல் வீரர் சாகிப் அல் ஹசன் தான். 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?