Advertisement


‘பீனிக்ஸ்’ பறவை யுவராஜ் சிங்

செப்டம்பர் 11, 2017.
 Comments  
 


Yuvraj Singh is like phoenix, loves rising from the ashes Saba Karim
 

புதுடில்லி: ‘‘யுவராஜ் சிங், ‘பீனிக்ஸ் பறவை போல மீண்டு வருவார், அணியில் இடம் பிடிப்பார்,’’ என, முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரீம் கூறினார்.

இந்திய வீரர் யுவராஜ் சிங், 35. கடந்த 2011 உலக கோப்பை தொடர் நாயகன் ஆன இவர், பின் ‘கேன்சர்’ பாதிப்பில் இருந்து மீண்டு வந்தார். 2014 உலக கோப்பை ‘டுவென்டி–20’ அணியில் இடம் பிடித்தார்.

2015 உலக கோப்பை ஒருநாள் அணியில் சேர்க்கப்படாமல் இருந்த இவர், மீண்டும் 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்றார். தற்போது, ஆஸ்திரேலிய தொடரில் யுவராஜ் சிங் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரீம் கூறியது:

யுவராஜ் சிங்கை குறைத்து மதிப்பிட்டால், அது அவர்களது தவறு தான். சாம்பலில் இருந்து உயிர்த்து எழும் ‘பீனிக்ஸ்’ பறவை போல. தன் மீதான கணிப்புகள் தவறு என்பதை இதற்கு முன் நிரூபித்துள்ளார்.

அவரது பேட்டிங்கில் சில பிரச்னைகள் இருக்கலாம். ஆனால், அவர் ஒரு சாம்பியன் வீரர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வந்துள்ளார். இதனால், யுவராஜ் சிங் உடற்தகுதியை வெளிப்படுத்தி, முதல் தர போட்டிகளில் ரன்கள் குவித்து, தேர்வாளர்கள் கவனத்தை ஈர்த்தால், தேசிய அணியில் இடம் பிடிக்கலாம்.

இது அவ்வளவு எளிதல்ல, என்றாலும் யாருக்குத் தெரியும், யுவராஜ் சிங் இப்போதுள்ளதை விட இன்னும் வலிமையாக மீண்டு வரலாம். இவ்வாறு சபா கரீம் கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?