Advertisement


உலக செஸ்: சேதுராமன் தோல்வி

செப்டம்பர் 11, 2017.
 Comments  
 


world chess sethuraman india
 

 டிபில்சி: உலக கோப்பை செஸ் தொடரில் இந்திய வீரர் சேதுராமன் தோல்வியடைந்தார். உலக சாம்பியன் கார்ல்சன், மூன்றாவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வியடைந்து, வெளியேறினார்.

ஜார்ஜியாவில் உலக கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. ‘நாக் அவுட்’ முறையில் நடக்கும் இத்தொடரில் முதல் இரு இடம் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற உதவும், ‘கேன்டிடேட்ஸ்’ செஸ் தொடரில் பங்கேற்கலாம்.

இதன் மூன்றாவது சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன. இதில் இந்தியாவின் சேதுராமன், நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதுகின்றனர். இதல் முதல் இரு போட்டிகள் ‘டிரா’ ஆனதால், ஆட்டம் ‘டை பிரேக்கருக்கு’ சென்றது.

இதன் முதல் போட்டியில் இதில் கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய சேதுராமன், 66வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். இதனால், இரண்டாவது போட்டியில் சேதுராமன் (1.0–2.0) வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மற்றொரு மூன்றாவது சுற்றில் இந்தியாவின் விதித் சந்தோஷ் குஜராத்தி, சீனாவின் டிங் லைரன் மோதினர். முதல் இரு போட்டிகள் ‘டிரா’ (1.0–1.0) ஆனதால், ‘டை பிரேக்கர்’ நடந்தது. இதன் முதல் போட்டியும் ‘டிரா’ ஆக, இருவரும் 1.5–1.5 என, சமநிலையில் உள்ளனர்.

கார்ல்சன் ‘அவுட்’:

உலக சாம்பியன் கார்ல்சன், தனது மூன்றாவது சுற்றில் சீன வீரர் ஜியாங்ஜியிடம் 0.5–1.5 என்ற கணக்கில் வீழ்ந்து, தொடரில் இருந்து வெ ளியேறினார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?