Advertisement


மார்டினா ஹிங்கிஸ் ‘25’

செப்டம்பர் 11, 2017.
 Comments  
 


us open tennis martina hingis
 

 நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் வென்ற சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ், தனது 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ், சீனதைபேயின் யங்–ஜன் சான் ஜோடி 6–3, 6–2 என செக்குடியரசின் லுாசி ஹராடெக்கா, கதரினா சினியகோவா ஜோடியை தோற்கடித்து, கோப்பை வென்றது.

இது, யு.எஸ்., ஓபன் பெண்கள் இரட்டையர் பிரிவில் ஹிங்கிஸ், 36, கைப்பற்றிய 3வது (1998, 2015, 2017) பட்டம். முன்னதாக இவர், கலப்பு இரட்டையரில் பிரிட்டன் வீரர் ஜமி முர்ரே உடன் இணைந்து கோப்பை வென்றிருந்தார்.

இதன்மூலம் ஹிங்கிஸ், தனது 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். இதுவரை இவர், ஒற்றையரில் 5, பெண்கள் இரட்டையரில் 13, கலப்பு இரட்டையரில் 7 என மொத்தம் 25 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ளார். இவர், பிரெஞ்ச் ஓபன் ஒற்றையரில் மட்டும் கோப்பை வென்றதில்லை. இரண்டு முறை பைனல் வரை சென்றிருந்தார்.

 

ஹிங்கிஸ் வென்ற படங்களின் விவரம்:

ஒற்றையர்:

ஆஸி., ஓபன்: 1997 – 1999

விம்பிள்டன்: 1997

யு.எஸ்., ஓபன்: 1997

 

பெண்கள் இரட்டையர்:

ஆஸி., ஓபன்: 1997 – 1999, 2002, 2016

பிரெஞ்ச் ஓபன்: 1998, 2000

விம்பிள்டன்: 1996, 1998, 2015

யு.எஸ்., ஓபன்: 1998, 2015, 2017


கலப்பு இரட்டையர்:

ஆஸி., ஓபன்: 2006, 2015

பிரெஞ்ச் ஓபன்: 2016

விம்பிள்டன்: 2015, 2017

யு.எஸ்., ஓபன்: 2015, 2017

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?