Advertisement


சென்னையில் கிரிக்கெட் ‘ஜுரம்’ ஆரம்பம் *இன்று இளம் இந்தியா–ஆஸி., மோதல்

செப்டம்பர் 11, 2017.
 Comments  
 


australia, india precident eleven team warm up match
 

 சென்னை: சென்னையில் இன்று நடக்கும் ஒருநாள் பயிற்சி போட்டியில், இந்திய லெவன் அணி, ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இதில் இளம் இந்திய அணி, அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து ஒருநாள், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி வரும் 17ல், சென்னையில் நடக்கவுள்ளது. இப்போட்டிக்கு முன், ஆஸ்திரேலியா, இந்தியா போர்டு பிரசிடென்ட் லெவன் அணிகள் மோதும் ஒருநாள் பயிற்சி போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கிறது.

கேப்டன் குர்கீரத்:

துலீப் டிராபி தொடரில் விளையாடி வரும் நிறைய இளம் வீரர்களுக்கு இந்திய லெவன் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள குர்கீரத் சிங் மான், மட்டுமே 3 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றவர்.

சாதிப்பாரா சுந்தர்:

பத்தாவது ஐ.பி.எல்., தொடரில் சிறப்பாக விளையாடிய ராகுல் திரிபதி, நிதிஷ் ராணா உள்ளிட்டோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கலாம். ஐ.பி.எல்., தொடரில் புனே அணிக்காக ஸ்டீவ் ஸ்மித் தலைமையின் கீழ் விளையாடிய சென்னை வீரர் வாஷிங்டன் சுந்தர், ‘ஆல்–ரவுண்டராக’ சாதிக்கலாம். மற்றொரு தமிழக வீரர் ராகில் ஷா, சொந்த மண்ணில் ‘சுழல் ஜாலம்’ காட்ட காத்திருக்கிறார். இரண்டு சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் விளையாடிய சந்தீப் சர்மா, வேகப்பந்துவீச்சில் அசத்தலாம்.

மயாங்க் அகர்வால், விக்கெட் கீப்பர் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, அவேஷ் கான் உள்ளிட்டோர் கைகொடுக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணியை சுலபமாக வீழ்த்தலாம்.

ஸ்மித் நம்பிக்கை:

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர், பேட்டிங்கில் நம்பிக்கை தருகின்றனர். இவர்களுக்கு, ஆரோன் பின்ச், விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் உள்ளிட்டோர் கைகொடுத்தால் நல்லது. ஜேம்ஸ் பால்க்னர், மார்கஸ் ஸ்டாய்னிஸ், நாதன் கூல்டர்–நைல், மேக்ஸ்வெல் என நிறைய ‘ஆல்–ரவுண்டர்கள்’ இருப்பது பலம். பெரும்பாலான ஆஸ்திரேலிய வீரர்கள் ஐ.பி.எல்., தொடரில் விளையாடி இருப்பதால், இந்திய ஆடுகளங்கள் குறித்து கவலைப்படத் தேவையில்லை. ‘சுழலில்’ ஆடம் ஜம்பா, சாதிக்கலாம்.

 

அட்டவணை

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் மற்றும் ‘டுவென்டி–20’ தொடருக்கான அட்டவணை.

நாள் போட்டி இடம்

செப். 17 முதல் ஒருநாள் சென்னை

செப். 21 2வது ஒருநாள் கோல்கட்டா

செப். 24 3வது ஒருநாள் இந்துார்

செப். 28 4வது ஒருநாள் பெங்களூரு

அக். 1 5வது ஒருநாள் நாக்பூர்

 

அக். 7 முதல் ‘டுவென்டி–20’ ராஞ்சி

அக். 10 2வது ‘டுவென்டி–20’ கவுகாத்தி

அக். 13 3வது ‘டுவென்டி–20’ ஐதராபாத்

 

★ ஒருநாள் போட்டிகள் மதியம் 1:30 மணிக்கு துவங்கம்.

★ ‘டுவென்டி–20’ போட்டிகள் இரவு 7:00 மணிக்கு துவங்கும்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?