Advertisement


‘16’ பெற்று நடால் பெருவாழ்வு! ★யு.எஸ்., ஓபனில் சாம்பியன்

செப்டம்பர் 11, 2017.
 Comments  
 


nadal us open tennis
 

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், மூன்றாவது முறையாக கோப்பை வென்றார். இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் தனது 16வது பட்டத்தை கைப்பற்றினார். 

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் ‘நம்பர்–1’ ஸ்பெயினின் ரபெல் நடால், 32வது இடத்தில் உள்ள தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் மோதினர்.

முதல் செட்டை 6–3 எனக் கைப்பற்றிய நடால், இரண்டாவது செட்டை 6–3 என தன்வசப்படுத்தினார். தொடர்ந்து அசத்திய இவர், மூன்றாவது செட்டை 6–4 என வென்றார்.

இரண்டு மணி நேரம், 28 நிமிடம் வரை நீடித்த போட்டியில், அபாரமாக ஆடிய நடால் 6–3, 6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, யு.எஸ்., ஓபனில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதற்கு முன், 2010, 2013ல் கோப்பை வென்றார்.


எத்தனை ‘செல்வங்கள்’

யு.எஸ்., ஓபன் பைனலில் அசத்திய நடால், தனது 16வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். இவர், ஆஸ்திரேலிய ஓபனில் 1 (2009), தனக்கு பிடித்த களிமண் களமான பிரெஞ்ச் ஓபனில் 10 (2005–08, 2010–14, 2017), விம்பிள்டனில் 2 (2008, 2010), யு.எஸ்., ஓபனில் 3 (2010, 2013, 2017) என மொத்தம் 16 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றி உள்ளார்.

 

3

ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் முதலிரண்டு இடங்களில் சுவிட்சர்லாந்தின் பெடரர் (19 பட்டம்),  நடால் (16) உள்ளனர். நடால், இன்னும் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் பட்சத்தில், பெடரர் சாதனையை சமன் செய்யலாம்.

‘டாப்–5’ வீரர்கள்:

வீரர் ஆஸி., பிரெஞ்ச் விம்பிள்டன் யு.எஸ்., மொத்தம்

பெடரர் (சுவிட்சர்லாந்து) 5 1 8 5 19

நடால் (ஸ்பெயின்) 1 10 2 3 16

சாம்பிராஸ் (அமெரிக்கா) 2 0 7 5 14

எமர்சன் (ஆஸி.,) 6 2 2 2 12

ஜோகோவிச் (செர்பியா) 6 1 3 2 12

 

5

யு.எஸ்., ஓபனில் கோப்பை வென்ற நடால், இந்த ஆண்டில் தனது 5வது பட்டத்தை கைப்பற்றினார். இவர், மான்டி–கார்லோ மாஸ்டர்ஸ் (பிரான்ஸ்), பார்சிலோனா ஓபன் (ஸ்பெயின்), மாட்ரிட் ஓபன் (ஸ்பெயின்), பிரெஞ்ச் ஓபன் (பிரான்ஸ்), யு.எஸ்., ஓபன் (அமெரிக்கா) தொடர்களில் கோப்பை வென்றுள்ளார்.

★ தவிர இது, தென் ஆப்ரிக்க வீரர் கெவின் ஆண்டர்சனுக்கு எதிராக கிடைத்த 5வது வெற்றி. ஏ.டி.பி., அரங்கில் இவர்கள் இருவரும் மோதிய 5 போட்டிகளிலும் நடால் வெற்றி பெற்றார்.

 

74

ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவில் நடால், தனது 74வது பட்டம் வென்றார். இதன்மூலம் ‘ஓபன் எரா’வில் ஒற்றையர் பிரிவில் அதிக பட்டம் வென்ற வீரர்கள் வரிசையில் 5வது இடத்தை ஆஸ்திரேலியாவின் ராடு லீவருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். முதல் நான்கு இடங்களில் அமெரிக்காவின் ஜிம்மி கானர்ஸ் (109), செக்குடியரசு/அமெரிக்காவின் இவான் லெண்டில் (94), சுவிட்சர்லாந்தின் பெடரர் (93), அமெரிக்காவின் ஜான் மெக்கென்ரோ (77) ஆகியோர் உள்ளனர்.

 

ரூ. 23.66 கோடி பரிசு

யு.எஸ்., ஓபன் பைனலில் வெற்றி பெற்ற ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், கோப்பையுடன் ரூ. 23.66 கோடி பரிசு வென்றார். இரண்டாவது இடம் பிடித்த தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன், ரூ. 11.67 கோடி பரிசு பெற்றார்.

 

2

இந்த ஆண்டு நடால் வென்ற 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். சமீபத்தில் பிரெஞ்ச் ஓபனில் கோப்பை வென்ற இவர், ஆஸ்திரேலிய ஓபனில் பைனல் வரை சென்றார். விம்பிள்டனில் 4வது சுற்றோடு திரும்பினார்.

 

மகிழ்ச்சி

வெற்றி குறித்து நடால் கூறுகையில், ‘‘யு.எஸ்., ஓபனில் 3வது முறையாக கோப்பை வென்றது மகிழ்ச்சி. காயத்தில் இருந்து மீண்ட பின், இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றது சிறப்பு. ஒட்டுமொத்தத்தில் இந்த ஆண்டு, எனது சிறந்த சீசனில் ஒன்றாக அமைந்தது,’’ என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?