Advertisement


செஸ்: மகாலட்சுமி சாம்பியன்

செப்டம்பர் 11, 2017.
 Comments [1]  
 


National chess championship junior
 

 பாட்னா: தேசிய ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் (19 வயது) போட்டியில் தமிழகத்தின் மகாலட்சுமி சாம்பியன் பட்டம் வென்றார்.

பீகாரின் பாட்னாவில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதன் 11வது மற்றும் கடைசி சுற்றில் தமிழகத்தின் மகாலட்சுமி, மகாராஷ்டிராவின் பக்சி ருடுஜாவை வீழ்த்தினார்.

தமிழகத்தின் வர்ஷினி, ம.பி.,யின் ஜெயின் வித்யாவை வென்றார். மற்றொரு தமிழக வீராங்கனை லட்சுமி, குஜராத்தின் தேஜஸ்வினி மோதிய போட்டி ‘டிரா’ ஆனது.

11 சுற்று முடிவில், மொத்தம் 9 புள்ளிகள் பெற்ற மகாலட்சுமி, சாம்பியன் கோப்பை கைப்பற்றினார். மகாராஷ்டிராவின் சாக் சி (8.5 புள்ளி), கர்நாடகாவின் இஷா சர்மா (8.5) அடுத்த இரு இடங்கள் பிடித்தனர். 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
1   0  
Siva 2 weeks ago | Report abuse
வாழ்த்துக்கள் சகோதரி. மேன்மேலும் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறோம்.




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?