Advertisement


சொந்த விமானம்...சொகுசு பயணம்: இது கபில் ‘ஐடியா’

செப்டம்பர் 10, 2017.
 Comments  
 


Kapil Dev, Flight For Indian Cricketers
 

புதுடில்லி: ‘‘பி.சி.சி.ஐ.,க்கு நல்ல வருமானம் கிடைப்பதால், சொந்தமாக விமானம் வாங்கலாம். இந்திய வீரர்களும் சொகுசாக பயணம் செய்யலாம். நேரத்தையும் சேமிக்கலாம்,’’என, கபில்தேவ் ஆலோசனை தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ். கடந்த 1983ல் உலக கோப்பை வென்று தந்த பெருமைமிக்கவர். அவ்வப்போது உருப்படியான ஆலோசனை வழங்குவார். நாட்டின் முக்கிய நகரங்களில் இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) சார்பில் விருந்தினர் மாளிகைகள் கட்ட வேண்டும் என சில ஆண்டுகளுக்கு முன் வலியுறுத்தினார். இங்கு வீரர்கள் தங்கிக் கொள்ளலாம். இதன் மூலம் ஓட்டல்களுக்கு செலவாகும் தொகையை மிச்சப்படுத்தலாம் என்றார். இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை.

தற்போது சொந்தமாக விமானம் வாங்கும்படி வலியுறுத்தியுள்ளார். 100 பேர் பயணம் செய்யக்கூடிய ‘ஏர்பஸ்’ வகை விமானத்தின் விலை சுமார் ரூ. 500 கோடி. இத்தொகை பி.சி.சி.ஐ.,க்கு பெரிய விஷயமல்ல. 

இது குறித்து கபில் கூறியது: பி.சி.சி.ஐ.,க்கு நல்ல வருமானம் கிடைப்பதால்,  சொந்தமாக விமானம் வாங்கலாம். இதன் மூலம் எந்த பகுதிக்கும் எளிதாக பயணம் மேற்கொள்ள முடியும். நேரத்தையும் மிச்சப்படுத்தலாம். வீரர்களுக்கும் போட்டிக்கு இடையே போதிய ஓய்வு கிடைக்கும். விமான ‘பார்க்கிங்’ கட்டணத்தை செலுத்தும் வசதி பி.சி.சி.ஐ.,க்கு உண்டு. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இத்திட்டத்தை செயல்படுத்தியிருக்க வேண்டும்.

அமெரிக்க கோல்ப் நட்சத்திரங்களை போல இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களும்  சொந்தமாக விமானம் வாங்க வேண்டுமென விரும்புகிறேன்.

பல்வேறு நாடுகளில் நடக்கும் ‘டுவென்டி–20’ லீக்  போட்டிகளில் விளையாட, நமது வீரர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். அவர்களது வருமானத்தை தடுக்க கூடாது.

சர்வதேச போட்டிகளில் சச்சின், 100 சதம் அடித்த போது, அந்த சாதனையை யாரும் முறியடிக்க முடியாது என நினைத்தேன். ஆனால், சமீப காலமாக விராத் கோஹ்லியின் ஆட்டத்தை பார்த்த போது மனதில் மாற்றம் பிறந்துள்ளது. இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு இதே போல சிறப்பாக பேட் செய்தால், சச்சின் சாதனையை கோஹ்லி நெருங்கி விடுவார்.

இவ்வாறு கபில் கூறினார். 

Advertisement
Cricket logo
United Arab Emirates - 137/1 (28.4)
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?