Advertisement


இந்தியாவை வீழ்த்த புது வியூகம்: ஸ்டீவ் ஸ்மித் ‘ரெடி’

செப்டம்பர் 10, 2017.
 Comments  
 


India, Australia, One Day Cricket, Steve Smith
 

சென்னை: ‘‘கேப்டன் கோஹலியை சொற்ப ரன்னில் அவுட்டாக்கினால், இந்தியாவை சுலபமாக வீழ்த்தலாம்,’’ என, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் 17ல் சென்னையில் நடக்கவுள்ளது. இதற்காக சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியினர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் இலங்கை சென்ற கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் (3–0), ஒருநாள் (5–0), ‘டுவென்டி–20’ (1–0) என மூன்று தொடர்களையும் முழுமையாக கைப்பற்றியது. ஒருநாள் போட்டியில் அசத்திய இந்திய கேப்டன் கோஹ்லி, 2 சதம், ஒரு அரைசதம் என 330 ரன்கள் குவித்தார். தவிர இவர், ஒருநாள் அரங்கில் தனது 30வது சதமடித்து, முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் சாதனையை சமன் செய்தார். ஆனால் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ஒருநாள் போட்டியில் இதுவரை 8 சதம் மட்டுமே அடித்துள்ளார்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியது: இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதானதல்ல. இந்திய கேப்டன் கோஹ்லி சிறந்த வீரர். அவருடன் என்னை ஒப்பிட விரும்பவில்லை. இந்தியாவுக்கு எதிராக சாதிக்க வேண்டுமானால், போட்டியில் கேப்டன் கோஹ்லியை சொற்ப ரன்னில் அவுட்டாக்கி, அவரை அமைதி பெறச் செய்ய வேண்டும். இதனை மட்டும் சரியாக நிகழ்த்திவிட்டால், சுலபமாக வெற்றி பெற்றுவிடலாம்.

அஷ்வின், ரவிந்திர ஜடேஜா போன்ற அனுபவ சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாததால், இந்திய ‘சுழலை’ குறைத்து மதிப்பிட முடியாது. ஏனெனில் சமீபத்திய இலங்கை தொடரில் குல்தீப் யாதவ், யுவேந்திர சகால், அக்சர் படேல் சிறப்பாக செயல்பட்டனர். இவர்களுக்கு, சொந்த மண் சாதகமாக அமையலாம்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர், அடுத்து நடக்கவுள்ள ஆ ஷஸ் டெஸ்ட் தொடருக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும் என நம்புகிறேன். ஒருநாள் போட்டிக்கு பின், டெஸ்டில் விளையாடுவதில் எவ்வித பிரச்னையும் இல்லை.

இவ்வாறு ஸ்டீவ் ஸ்மித் கூறினார். 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?