Advertisement


துலீப் டிராபி: இந்தியா ‘ரெட்’ வெற்றி

செப்டம்பர் 10, 2017.
 Comments  
 


Duleep Trophy Cricket, India Red, India Green, Dinesh Karthik
 

லக்னோ: துலீப் டிராபி லீக் போட்டியில், இந்தியா ‘ரெட்’ அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ‘கிரீன்’ அணியை வீழ்த்தியது.

உ.பி.,யில் உள்ளூர் துலீப் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லக்னோவில் நடந்த லீக் போட்டியில் இந்தியா ‘ரெட்’, இந்தியா ‘கிரீன்’ அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் இந்தியா ‘ரெட்’ 323, இந்தியா ‘கிரீன்’ 157 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் கேப்டன் தினேஷ் கார்த்திக் (100*), பிரியங்க் பன்சால் (133*) கைகொடுக்க இந்தியா ‘ரெட்’ அணி 2 விக்கெட்டுக்கு 307 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.

பின், 474 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இந்தியா ‘கிரீன்’ அணிக்கு கருண் நாயர் (120), ரவிகுமார் சமர்த் (59) மட்டும் கைகொடுத்தனர். முரளி விஜய் (13), கேப்டன் பார்த்திவ் படேல் (26) ஏமாற்றினர். இரண்டாவது இன்னிங்சில் இந்தியா ‘கிரீன்’ அணி 303 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வியடைந்தது. இந்தியா ‘ரெட்’ அணி சார்பில் கரண் சர்மா 6, சித்தார்த் கவுல் 4 விக்கெட் கைப்பற்றினர்.

வரும் 13ல் கான்பூரில் துவங்கும் லீக் போட்டியில் இந்தியா ‘ரெட்’, இந்தியா ‘புளூ’ அணிகள் மோதவுள்ளன. 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?