Advertisement


ரவிந்திர ஜடேஜா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு

செப்டம்பர் 10, 2017.
 Comments  
 


ICC Test Cricket Ranking, Ravindra Jadeja, Ashwin
 

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிந்திர ஜடேஜா, ‘நம்பர்–2’ இடத்துக்கு தள்ளப்பட்டார்.

டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிந்திர ஜடேஜா, 884 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து ‘நம்பர்–2’ இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் (852 புள்ளி), 3வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லார்ட்சில் நடந்த 3வது டெஸ்டில், 9 விக்கெட் (2+7) கைப்பற்றி 2–1 என தொடரை கைப்பற்ற வித்திட்ட இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், 896 புள்ளிகளுடன் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறினார்.

ராகுல் முன்னேற்றம்: பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் புஜாரா (4வது இடம்), கேப்டன் விராத் கோஹ்லி (6வது) தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர். மற்ற இந்திய வீரர்களான லோகேஷ் ராகுல் (9வது இடம்), அஜின்கியா ரகானே (10வது) தலா ஒரு இடம் முன்னேறினர். முதல் மூன்று இடங்களில் முறையே ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (936 புள்ளி), இங்கிலாந்தின் ஜோ ரூட் (889), நியூசிலாந்தின் வில்லியம்சன் (880) நீடிக்கின்றனர்.

‘ஆல்–ரவுண்டர்களுக்கான’ பட்டியலில் முதல் மூன்று இடங்களில் முறையே வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் (456 புள்ளி), இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (430), அஷ்வின் (422) தொடர்கின்றனர். 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?