Advertisement


மீண்டும் ஷமி, உமேஷ் வாய்ப்பு: இந்திய அணி அறிவிப்பு

செப்டம்பர் 10, 2017.
 Comments [1]  
 


India Cricket Team, Australia One Day Series, Shami, Umesh Yadav
 

புதுடில்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்களான முகமது ஷமி, உமேஷ் யாதவ் இடம் பிடித்துள்ளனர்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து ஒருநாள், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி வரும் 17ல் சென்னையில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் முறையே கோல்கட்டா (செப். 21), இந்துார் (செப். 24), பெங்களூரு (செப். 28), நாக்பூர் (அக். 1) நகரங்களில் நடக்கவுள்ளன. முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட இந்திய அணியை, தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் அறிவித்தார்.

இதில் வேகப்பந்துவீச்சாளர்களான முகமது ஷமி, உமேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய இவர்களுக்கு, ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்ற மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் மட்டும் தேர்வு செய்யப்படவில்லை. இதனையடுத்து இவர், நியூசிலாந்து செல்லும் இந்தியா ‘ஏ’ அணியில் இடம் பிடித்தார்.

அனுபவ சுழற்பந்துவீச்சாளர்களான அஷ்வின், ரவிந்திர ஜடேஜாவுக்கு மீண்டும் ஓய்வு அளிக்கப்பட்டது. ஏற்கனவே அஷ்வின், இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி போட்டியில் விளையாடி வருகிறார். ஜடேஜா மட்டும் ஓய்வில் உள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ‘சுழலில்’ அசத்திய குல்தீப் யாதவ், யுவேந்திர சகால், அக்சர் படேல் ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் சேர்ந்து மொத்தம் 14 விக்கெட் கைப்பற்றினர். ‘ஆல்–ரவுண்டர்’ இடத்தை ஹர்திக் பாண்ட்யா தக்கவைத்துக் கொண்டார்.

‘பேட்டிங்கில்’ ஷிகர் தவான், ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், கேதர் ஜாதவ், மணிஷ் பாண்டே, ரகானே ஆகியோர் மீண்டும் தேர்வாகினர்.

இந்திய அணி: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், அஜின்கியா ரகானே, தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சகால், பும்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், முகமது ஷமி.

சுழற்சி முறையில் தேர்வு

இதுகுறித்து தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் கூறுகையில், ‘‘ஆஸ்திரேலிய தொடரில் வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்படும். சமீபத்தில் இலங்கை தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் குல்தீப், அக்சர், சகால் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் தொடர்களை கருத்தில் கொண்டு அணி தேர்வு செய்யப்படும்,’’ என்றார். 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
1   0  
chandru one week ago | Report abuse
தினேஷ் கார்த்திக் என்ன பாவம் செய்தார்? அது ஏன் சில வீரர்களுக்கு மட்டும் எவ்வளவு failures இருந்தாலும், மீண்டும், மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது? லோகேஷ் ராகுல் இலங்கைக்கெதிரான தொடரிலேயே form இன்றி தடவினார். அவர் இடத்தில, தினேஷ் கார்த்திக் தெரிவு செய்திருக்கப்பட வேண்டும். TNCA தமிழக வீரர் நலன் காக்காமல், என்ன செய்து கொண்டிருக்கிறது? பத்ரிநாத், தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் தமிழகத்தில் பிறந்ததுதான் அவர்கள் செய்த மிகப்பெரிய பாவம். ஒரு தில்லியிலோ, மும்பையிலோ, பெங்களூருவிலோ, பிறந்திருந்தால், புகழின் உச்சிக்கு சென்றிருப்பார்கள்.




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?