Advertisement


பார்த்திவ் 10 ஆயிரம் ரன்

செப்டம்பர் 09, 2017.
 Comments  
 


parthiv
 

லக்னோ: முதல் தர கிரிக்கெட்டில், 10 ஆயிரம் ரன்களை எட்டினார் பார்த்திவ் படேல்.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடர் துலீப் டிராபி. 4 நாட்கள் கொண்ட இதன் 56வது ‘சீசன்’ தற்போது நடக்கிறது. இந்தியா ரெட், இந்தியா புளூ, இந்தியா கிரீன் என மூன்று அணிகள் தலா ஒரு முறை மற்றொரு அணிகளுடன் மோதும். புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் பைனலுக்கு முன்னேறும். இந்தியா கிரீன், இந்தியா ரெட் அணிகள் மோதும் முதல் போட்டி உ.பி.,யின் லக்னோவில் நடக்கிறது.

இந்தியா ரெட் அணி முதல் இன்னிங்சில் 323 ரன்கள் எடுத்தது. பின், களமிறங்கிய இந்தியா கீரின் அணிக்கு பிரசாந்த் சோப்ரா (65) அரை சதம் கடந்தார். கவுதம் பந்தில் கருண் நாயர் (37) சிக்கினார். கேப்டன் பார்த்திவ் படேல் 17 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் ஏமாற்ற, இந்தியா கிரீன் அணி முதல் இன்னிங்சில் 157 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்தியா ரெட் அணி, 2 விக்கெட்டுக்கு 222 ரன்கள் எடுத்து 388 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

பார்த்திவ் பெருமை:

முதல் இன்னிங்சில் பார்த்திவ்  5 ரன்கள் எடுத்தபோது, முதல் தர போட்டியில் 10 ஆயிரம் ரன்களை எட்டினார். இதுவரை, இவர் 169 போட்டியில் 25 சதம், 56 அரை சதம் என மொத்தம் 10012 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம், இந்த இலக்கை எட்டிய 48வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். 

இங்கிலாந்துக்கு எதிரான நாட்டிங்காம் (ஆக. 2012) டெஸ்டில் அறிமுகமான இவர், இதுவரை 23 டெஸ்டில் 878 ரன்கள் எடுத்துள்ளார். தவிர, 38 ஒரு நாள் (736 ரன்), 2 சர்வதேச ‘டுவென்டி–20’ (36) போட்டிகளில் விளையாடி உள்ளார். கீப்பரான இவர், கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான சென்னை டெஸ்டில் (டிச. 2016) பங்கேற்றார்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?