Advertisement


ஜூனியர் கால்பந்து: தொடரும் சர்ச்சைகள்

செப்டம்பர் 09, 2017.
 Comments  
 


fifa soccer
 

புதுடில்லி: இந்தியாவில் ‘ஜூனியர்’ உலக கோப்பை (17 வயது) கால்பந்து தொடர் துவங்க இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவான நாட்கள் உள்ள நிலையில், அடுத்தடுத்து பல சர்ச்சைகள் ஏற்படுகின்றன. .

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) சார்பில், இந்தியாவில் முதன் முறையாக உலக கோப்பை தொடர் (17 வயதுக்கு உட்டோருக்கான) நடக்கவுள்ளது. வரும் அக்., 6ல் துவங்கும் இத்தொடரில் இந்தியா உட்பட மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன.

இந்திய அணி ‘ஏ’ பிரிவில், வலிமையான அமெரிக்கா, கொலம்பியா மற்றும் கானா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இத்தொடர் துவங்க இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், 2010 காமன்வெல்த் விளையாட்டில் ஏற்பட்ட குழப்பம் போல, தற்போதும் பல பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.

பயிற்சியாளர் நீக்கம்:

கடந்த 2015, பிப்., ல் 17 வயது அணிக்கு பயிற்சியாளரானர் நிகோலய் ஆடம் (ஜெர்மனி). வீரர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக தொல்லை தந்தார் என கூறப்பட்டு, திடீரென நீக்கப்பட்டார். உலக கோப்பை தொடருக்கு இந்திய அணியை தயார் செய்ய வேண்டிய நேரத்தில், இது பெரிய அதிர்ச்சி தான்.

மைதான தாமதம்:

கடந்த மார்ச் மாதம், மைதானங்களை பார்வையிட வந்த ‘பிபா’ குழு, கொச்சியை பார்த்து அதிருப்தி தெரிவித்தது. பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை 60,000ல் இருந்து, 41,748 ஆக குறைத்தது.

பெயர் தெரியலை:

டிக்கெட் விற்பனையை துவக்கி வைக்க, பார்சிலோனா அணி முன்னாள் கேப்டன் இனியஸ்டா, உலக கோப்பை, யூரோ கோப்பை வென்ற ஸ்பெயின் அணியின் கார்லஸ் புயோல் இந்தியா வந்தனர். இவர்களது பெயரைக் கூட, சரியாக உச்சரிக்கத் தெரியாமல் தள்ளாடினார் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல். போட்டிக்கான ‘டிரா’ விழாவில் பிரபுல் படேல் கூறுகையில்,‘‘ இந்தியா 1950ல் ‘பிபா’ உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றதாக கூறினார். ஆனால், 1958 என்பது தான் சரி.

இது உண்மையா:

நிலைமை இப்படி இருக்க, உலக கோப்பை பயிற்சிக்காக சென்ற, இளம் இந்திய அணி, இத்தாலியின் 17 வயது அணியை வென்றதாக, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) சார்பில் செய்திகள் வௌியாகின. உண்மையில் இத்தாலியில் நடக்கும் மூன்றாம் தர போட்டிகளில் பங்கேற்கும் லெகா புரோ என்ற அணி என, பிறகு தெரியவந்தது.

விற்பனை பாதிப்பு:

‘பாதுகாப்பு பிரச்னை காரணமாக இந்திய அணி மோதும் போட்டிகள் அனைத்தும் டில்லிக்கு மாற்றப்படும்,’ என, தொடரின் இயக்குனர் சேவியர் செப்பி கூற, இது டிக்கெட் விற்பனையை பெரிதும் பாதித்தது. 

விழா சர்ச்சை:

உலக கோப்பை தொடர் துவங்கும் முதல் நாள் அக்., 5ல் டில்லி நேரு மைதானத்தில் மத்திய அரசு மற்றும் ஏ.ஐ.எப்.எப்., இணைந்து துவக்கவிழா நடத்த விரும்புகிறது. இதற்கு ‘பிபா’ எதிர்ப்பு தெரிவிக்கிறது.

பயிற்சி போதுமா:

இத்தனை சர்ச்சைகளை கடந்து, இந்திய அணி எப்படி தயாராகிறது என பார்த்தால் சற்று ஏமாற்றம் தான் கிடைக்கிறது. கடந்த ஒரு ஆண்டில் இந்தியா விளையாடிய 15 போட்டியில் 3 வெற்றி, 5 ‘டிரா’ மற்றும் 7ல் தோற்றது. 

சமீபத்தில் புதியதாக வந்த லுாயிஸ் நார்டன் பயிற்சியில் இந்தியா பங்கேற்ற 9 போட்டியில் 2 வெற்றி, 5 ‘டிரா’வுடன் 2ல் தான் தோற்றது. இது சற்று நம்பிக்கை தருகிறது.

இதே வேகத்தில் வரும் அக்., 6ல் அமெரிக்கா, பின் கொலம்பியா (அக்., 9), கானாவை (அக்., 12) தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, சாதித்தால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தான்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?