Advertisement


தொடரை வென்றது இங்கிலாந்து

செப்டம்பர் 09, 2017.
 Comments  
 


england team
 

லார்ட்ஸ்: மூன்றாவது டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி 2–1 என தொடரை கைப்பற்றியது.

இங்கிலாந்து சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகள் முடிவில் தொடர் 1–1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 123, இங்கிலாந்து 194 ரன்கள் எடுத்தன. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 93 ரன்கள் எடுத்திருந்தது.

ஆண்டர்சன் அபாரம்:

நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. டெஸ்டில் 500 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டிய ஆண்டர்சன் நேற்றும் மிரட்டினார். இவரது ‘வேகத்தில்’ ரோஸ்டன் சேஸ் (3), பிளாக்வுட் (5) சிக்கினர். ஷாய் ஹோப் (62) அரை சதம் கடந்தார். ஹோல்டர் 23, டவ்ரிச் 14 ரன்களில் கிளம்ப, வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 177 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது.

இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஆண்டர்சன் 7 விக்கெட் வீழ்த்தினார்.

எளிய இலக்கு:

இதனையடுத்து 107 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை துவக்கியது. அலெஸ்டர் குக் (17) விரைவில் திரும்பினார். ஸ்டோன்மேன் (40*), வெஸ்ட்லே (44*) வெற்றியை உறுதி செய்தனர். முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?