Advertisement


பட்டம் வெல்வாரா நடால்: யு.எஸ்., ஓபன் பைனலில் எதிர்பார்ப்பு

செப்டம்பர் 09, 2017.
 Comments  
 


nadal
 

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் பைனலுக்கு நான்காவது முறையாக முன்னேறினார் நடால். இதில், வெல்லும்பட்சத்தில், 16வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் கைப்பற்றி சாதிக்கலாம்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யு.எஸ்., ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் ‘நம்பர்–1’ வீரர், ஸ்பெயினின் நடால், பெடரரை வென்ற அர்ஜென்டினாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோவை எதிர்கொண்டார். இதன் முதல் செட்டை நடால் 4–6 என, இழந்தார். இதன் பின் சுதாரித்துக் கொண்ட நடால், அடுத்த இரு செட்களையும் 6–0, 6–3 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். தொடர்ந்து அசத்திய இவர், நான்காவது செட்டையும் 6–2 என, தன்வசப்படுத்தினார். முடிவில், நடால் 4–6, 6–0, 6–3, 6–2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.

நான்காவது முறை:

யு.எஸ்., ஓபன் தொடரின் பைனலுக்கு நடால், நான்காவது முறையாக (2010, 2011, 2013, 2017) முன்னேறினார். இதில் இரு முறை (2010, 2013) கோப்பை கைப்பற்றினார். 

ஆண்டர்சன் வெற்றி:

மற்றொரு அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன், ஸ்பெயினின் பாப்லோ பஸ்டாவை சந்தித்தார். இதில் ஆண்டர்சன் 4–6, 7–5, 6–3, 6–4 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று, கிராண்ட்ஸ்லாம் தொடரில் முதன் முறையாக பைனலுக்கு முன்னேறினார்.

இன்று நடக்கும் பைனலில் நடால்–கெவின் ஆண்டர்சனும் மோதுகின்றனர்.

சானியா ஜோடி ஏமாற்றம்:

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் ஷுவாய் பெங் ஜோடி, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ், சீன தைபேவின் யங்–ஜன் சன் ஜோடியிடம் 4–6, 4–6 என்ற நேர் செட்கணக்கில் தோல்வியடைந்தது.

52 ஆண்டுக்குப் பின்...

யு.எஸ்., ஓபன் தொடரில் கடந்த 1965ல் தென் ஆப்ரிக்காவின் கிளிப் டிரைஸ்டேல் பைனலுக்கு முன்னேறி இருந்தார். இதன் பின், 52 ஆண்டுக்குப்பின் தற்போதுதான் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த வீரர் ஒருவர் இத்தொடரின் பைனலுக்கு தகுதி பெற்றுள்ளார். 

15

ஆஸ்திரேலிய ஓபனில் 1 (2009), தனக்கு பிடித்த களிமண் களமான பிரெஞ்ச் ஓபனில் 10 (2005–08, 2010–14, 2017), விம்பிள்டனில் 2 (2008, 2010), யு.எஸ்., ஓபனில் 2 (2010, 2013) என மொத்தம் 15 கிராண்ட்ஸ்லாம பட்டங்களை நடால் கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தில் சுவிட்சர்லாந்தின் பெடரர் (18 பட்டம்) உள்ளார்.

★ பைனலில் நடாலை எதிர்த்து விளையாடும் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன், இதுவரை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றதில்லை. முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பைனலுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இதுவரை...

யு.எஸ்., ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இன்று ஸ்பெயினின் ரபெல் நடால், தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் மோதுகின்றனர். ஏ.டி.பி., அரங்கில் இவர்கள் இருவரும் இதுவரை 4 முறை மோதியுள்ளனர். இதில் அனைத்திலும் நடால் வெற்றி பெற்றார். கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 2வது முறையாக மோதவுள்ளனர். இதற்கு முன், கடந்த 2015ல் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் ‘ரவுண்டு–16’ சுற்று போட்டியில் மோதினர்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?