Advertisement


யு.எஸ்., ஓபன்: பைனலில் நடால்

செப்டம்பர் 09, 2017.
 Comments  
 


us open tennis nadal
 

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு ஸ்பெயினின் நடால் முன்னேறினார்.  அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யு.எஸ்., ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைறுதியில் உலகின் ‘நம்பர்–1’ வீரர், ஸ்பெயினின் நடால், பெடரரை வென்ற அர்ஜென்டினாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோவை எதிர்கொண்டார்.

இதன் முதல் செட்டை நடால் 4–6 என, இழந்தார். இதன் பின் சுதாரித்துக் கொண்ட நடால், அடுத்த இரு செட்களையும் 6–0, 6–3 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

தொடர்ந்து அசத்திய இவர், நான்காவது செட்டையும் 6–2 என, தன்வசப்படுத்தினார். முடிவில், நடால் 4–6, 6–0, 6–3, 6–2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.

நான்காவது முறை:

யு.எஸ்., ஓபன் தொடரின் பைனலுக்கு நடால், நான்காவது முறையாக (2010, 2011, 2013, 2017) முன்னேறினார். இதில் இரு முறை (2010, 2013) கோப்பை கைப்பற்றினார். 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?