Advertisement


கால்பந்து துவக்க விழா நடக்குமா

செப்டம்பர் 08, 2017.
 Comments  
 


fifa soccer
 

புதுடில்லி: உலக கோப்பை கால்பந்து தொடருக்கான துவக்க விழாவை நடத்த ‘பிபா’ அமைப்பு விரும்பவில்லை எனத்தெரிகிறது.

இந்தியாவில் 17 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து தொடர் (அக்.6–28) நடக்கவுள்ளது. கோல்கட்டா, புதுடில்லி உள்ளிட்ட 6 மைதானங்களில் போட்டிகள் நடக்கும். பொதுவாக, ‘பிபா’ தொடர்களில் துவக்க விழா கிடையாது. இதில் மாற்றம் செய்ய மத்திய விளையாட்டுத்துறை விரும்பியது. அக்டோபர் 5 அல்லது 6ம் தேதியில் டில்லியில் துவக்க விழா நடத்தி, பிரதமர் மோடியை அழைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ‘பிபா’ இதற்கு சம்மதம் தரும் எண்ணத்தில் இல்லை. 

இத்தொடரின் தலைமை அதிகாரி ஜெமி யார்ஷா கூறுகையில்,‘‘ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்க இன்னும் சில நாட்களே உள்ளன. இதற்கான பணிகள் இந்தியாவில் நடந்து வருகின்றன. இத்தொடரின் மூலம், இந்தியாவில் கால்பந்து வளர்ச்சியை ஏற்படுத்தலாம். இந்நிலையில், துவக்க விழா நடத்த மத்திய அரசு விரும்புகிறது. 

எங்களைப்பொறுத்தவரை, முந்தைய தொடர்களில் இம்மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்தியது இல்லை. முழு கவனமும் கால்பந்து போட்டி மற்றும் வீரர்கள் மீதுதான் இருக்க வேண்டும். துவக்கவிழாவுக்கு செலவழிக்கும் நிதியை, இளம் இந்திய வீரர்களின் எதிர்காலத்திற்கு பயன்படுத்தலாம். இதனால், துவக்கவிழா முடிவை தற்போதைக்கு நிறுத்தி வைக்க அறிவுறுத்தி உள்ளோம்,’’ என்றார்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?