Advertisement


யு.எஸ்., ஓபன்: பைனலில் மடிசன்

செப்டம்பர் 08, 2017.
 Comments  
 


us open tennis, Sloane Stephens, Madison Keys
 

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் அமெரிக்காவின் மடிசன் கெய்ஸ், ஸ்லோன் ஸ்டீபன்ஸ் மோதுகின்றனர்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யு.எஸ்., ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரைறுதியில் அமெரிக்காவின் மடிசன் கெய்ஸ், சக வீராங்கனை கோகோவை எதிர்கொண்டார்.

இதன் முதல் செட்டை 6–1 என, கைப்பற்றிய மடிசன் கெய்ஸ், அடுத்த செட்டையும் 6–2 என, எளிதாக தன்வசப்படுத்தினார். முடிவில், மடிசன் கெய்ஸ், 6–1, 6–2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று, கிராண்ட்ஸ்லாம் தொடரில் முதன் முறையாக பைனலுக்கு முன்னேறினார்.

வீனஸ் ‘ஷாக்’:

மற்றொரு அரையிறுதியில் உலகத் தரவரிசையில் 9வது இடத்திலுள்ள அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், 83வது இடத்தில் இருக்கும் சக வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்சை சந்தித்தார். முதல் செட்டை 6–1 என, ஸ்டீபன்ஸ் கைப்பற்றினார். வெகுண்டு எழுந்த வீனஸ், அடுத்த செட்டை 6–0 என, தன்வசப்படுத்தினார். வெற்றியாளரை முடிவு செய்யும், மூன்றாவது மற்றும் கடைசி செட் இழுபறியாக (5–5) இருந்தது. பின் இந்த செட்டை 7–5 என, ஸ்டீபன்ஸ் வென்றார். முடிவில், ஸ்டீபன்ஸ் 6–1, 0–6, 7–5 என்ற கணக்கில் வெற்றி பெற்று, கிராண்ட்ஸ்லாம் தொடரில் முதன் முறையாக பைனலுக்குள் நுழைந்தார். 

அரையிறுதியில் சானியா ஜோடி

பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, ஷுவாய் பெங்(சீனா) ஜோடி, செக் குடியரசின் ஆன்ட்ரியா, ஹங்கேரியின் பாபஸ் ஜோடியை 7–6, 6–4 என்ற கணக்கில் வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது.

2002க்குப் பின்...:

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் கடந்த 2002ல் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், செரினா வில்லியம்ஸ் சகோதரிகள் மோதினர். இதில் செரினா வென்றார். இதன் பின் 15 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் அமெரிக்காவை சேர்ந்த ஸ்லோன் ஸ்டீபன்ஸ், மடிசன் கெய்ஸ் மோத உள்ளனர்.

சபாஷ் ஸ்டீபன்ஸ்

அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ், 24 (‘நம்பர்–83’). கால் பாதத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக 11 மாதங்கள் ஓய்வில் இருந்தார். கடந்த ஜூலை மாதம் தரவரிசையில் 957 வது இடத்தில் இருந்தார். சமீபத்தில் விம்பிள்டனில் பங்கேற்ற இவர் கடைசியாக பங்கேற்ற 16 போட்டிகளில் 14ல் வெற்றி பெற்று, தற்போது பைனலுக்குள் நுழைந்தார். 

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?