Advertisement


தவிக்கும் மல்யுத்தம்

செப்டம்பர் 08, 2017.
 Comments  
 


India wrestling sushi kumar, sakshi malik
 

உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் இந்திய நட்சத்திரங்கள் ஒருவர் கூட பதக்கம் வெல்லாதது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது.

லண்டன் ஒலிம்பிக்கில் (2012) இந்தியா, முதன் முறையாக அதிகபட்சம் 6 பதக்கங்கள் வென்றது. இதனால், ரியோ ஒலிம்பிக்கில் (2016) இன்னும் அதிகம் வாங்க வேண்டும் என, ஒலிம்பிக் இலக்கு திட்டம் கொண்டு வரப்பட்டது. விளையாட்டு நட்சத்திரங்கள் பயிற்சிக்கு போதிய பணம் தரப்பட்டது. இருப்பினும், ரியோவில் இந்தியாவுக்கு 2 பதக்கம் தான் கிடைத்தது.

தற்போது, ஒலிம்பிக் முடிந்து ஒரு ஆண்டு ஆன நிலையில், பாட்மின்டன், மல்யுத்தத்தில் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் சமீபத்தில் நடந்தன.

பாட்மின்டனைப் பொறுத்தவரையில், இந்தியா முதன் முறையாக வெள்ளி வென்றது. இது சிந்துவுக்கு மூன்றாவது பதக்கமாக (1 வெள்ளி, 2 வெண்கலம்) அமைந்தது.  செய்னா மீண்டும் வெண்கலம் கைப்பற்றினார்.மறுபக்கம், ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக் ஷி மாலிக், 2014 காமன்வெல்த்தில் தங்கம் வென்ற வினேஷ் போகத் உட்பட 24 பேருடன் சென்ற இந்திய மல்யுத்த அணி, ஒரு பதக்கம் கூட வாங்காமல் திரும்பியது.

வளர்ச்சி எப்படி:

லண்டன் ஒலிம்பிக்கில் (2012) செய்னா வெண்கலம் வாங்கியதும், இந்தியாவில் பாட்மின்டன் வேகமாக வளர்ந்தது. இப்போட்டியில் ஆதிக்கத்தில் இருந்த சீனாவை முந்த பல்வேறு திட்டம் கொண்டு வரப்பட்டன. கோபி சந்த் (சிந்து), மறுபக்கம் விமல் குமார் (செய்னா) மின்னலாக செயல்பட்டனர். இதன் காரணமாக உலக சாம்பியன்ஷிப்பில் செய்னா, சிந்து மட்டுமன்றி, ரிதுபர்னா, தன்வி லாத் என, புதிய வீராங்கனைகளுடன், ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், சமீர் வர்மா, அஜய் ஜெயராம் என, பல வீரர்களும் பங்கேற்றனர்.

இங்கு வீழ்ச்சி:

மாறாக, மல்யுத்தம் வீழ்ச்சிப் பாதையில் செல்லத்துவங்கியது. 2008ல் வெண்கலம், 2012ல் வெ ள்ளி என, சுஷில் குமார், மல்யுத்தத்தில் அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றார்.

ஆனால், அடுத்து 2016ல் ஒரு வெண்கலம் (சாக் ஷி மாலிக்) மட்டும் தான் கிடைத்தது. இதேபோல, 2015 உலக சாம்பியன்ஷிப்பிலும்  ஒரு பதக்கம் (நர்சிங் யாதவ், வெண்கலம்) தான் கிடைத்தது.

சரிவு ஏன்:

அரசிடம் இருந்து நிதியுதவி போதியளவு கிடைக்கிறது. புரோ மல்யுத்த தொடரின் உதவியால் வருமானம், ஸ்பான்சர்கள் என, அதிக வரவேற்பு கிடைக்கிறது. இத்தனை வசதிகள் கிடைத்தும் மல்யுத்தம், சரிவுப் பாதையில் செல்கிறது. புதிய ‘ஐடியா’ இல்லாத இந்திய பயிற்சியாளர்களை மாற்றிவிட்டு, அன்னியர்களை கொண்டு வராததால்,  உலக சாம்பியன்ஷிப்பில் ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

வரும் 2018ல் காமன்வெல்த் (கோல்டு கோஸ்ட், ஆஸி.,), ஆசிய விளையாட்டு (ஜகார்த்தா, இந்தோனேஷியா), 2020ல் ஒலிம்பிக் (டோக்கியோ) வரவுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் பாட்மின்டன் வளர்ச்சியடைந்ததை பார்த்து, மல்யுத்த நட்சத்திரங்கள் பாடம் கற்றுக் கொண்டால் நல்லது.

 

சுஷில் குமார் ஆவேசம்

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மத்திய அரசு கண்காணிப்பாளராக சென்ற சுஷில் குமார் கூறுகையில்,‘‘ நமது நட்சத்திரங்களிடம் போராட்ட குணம் இல்லை. சாக் ஷி மாலிக் முதல் சுற்றில் தோற்றதை ஏற்கவே முடியாது. பயிற்சி நேரங்களில் கணவருடன் இணைந்து ஊர் சுற்றினார். வினேஷ் போகத், ‘சரண்’ அடைந்தார். இவரது வேகம் எல்லாம் எங்கே போனது. நமது வீரர்கள் மோசமாக விளையாடி தோற்றனர்,’’ என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?