Advertisement


ஆண்டர்சன் ‘500’ விக்கெட்: டெஸ்டில் சாதனை

செப்டம்பர் 07, 2017.
 Comments  
 


anderson
 

லார்ட்ஸ்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனை படைத்தார் ஆண்டர்சன்.

இங்கிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகள் முடிவில், தொடர் 1–1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 123 ரன்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 46 ரன்கள் எடுத்திருந்தது. 

ஸ்டோக்ஸ் அரை சதம்:

நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில், ரோச் ‘வேகத்தில்’ மாலன் (20), பேர்ஸ்டோவ் (21) சிக்கினர். ஸ்டோக்ஸ் (60) அரை சதம் கடந்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 194 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ரோச் 5 விக்கெட் வீழ்த்தினார்.

71 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை வெஸ்ட் இண்டீஸ் துவங்கியது. ஆண்டர்சன் ‘வேகத்தில்’ பிராத்வைட் (4) அவுட்டானார். கெய்ல் ஹோப் ஒரு ரன்னில் திரும்பினார். பாவெல் 45 ரன்கள் எடுத்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 93 ரன்கள் எடுத்து, 22 ரன்கள் முன்னிலையில் இருந்தது. ஹோப் (35), ரோஸ்டன் சேஸ் (3) அவுட்டாகாமல் இருந்தனர். 

6வது பவுலர்

நேற்றைய ஆட்டத்தில் கிரெய்க் பிராத்வைட்டை அவுட்டாக்கிய ஆண்டர்சன், டெஸ்ட் போட்டியில் தனது 500வது விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம், டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட் ( 129 போட்டி) என்ற இலக்கை எட்டிய 6வது பவுலரானார். இதற்கு முன், இலங்கையின் முரளிதரன் ( 133 போட்டி, 800 விக்.,), ஆஸ்திரேலியாவின் வார்ன் (145, 708 விக்.,), இந்தியாவின் கும்ளே ( 132, 619 விக்.,), ஆஸ்திரேலியாவின் மெக்ராத் (124, 563 விக்.,), வெஸ்ட் இண்டீசின் வால்ஸ் ( 132, 519 விக்.,) இந்த இலக்கை எட்டி இருந்தனர்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?