Advertisement


கோஹ்லியின் வெற்றி ரகசியம்: சொல்கிறார் குல்தீப் யாதவ்

செப்டம்பர் 07, 2017.
 Comments  
 


kuldeep, kohli
 

கொழும்பு: ‘‘கேப்டன் பணியில் அசத்துவது, பவுலர்கள் தங்கள் விருப்பப்படி, சுதந்திரமாக செயல்பட அனுமதி தருவது போன்ற காரணங்கள் தான் கோஹ்லியின் வெற்றிக்கு காரணம்,’’ என, குல்தீப் யாதவ் தெரிவித்தார்.

இலங்கை சென்ற இந்திய அணி, டெஸ்ட் (3–0), ஒருநாள் (5–0) மற்றும் ‘டுவென்டி–20’ (1–0) என, மூன்று தொடர்களையும் முழுமையாக வென்று அசத்தியது. இதுகுறித்து இந்திய அணியின் இளம் ‘சைனாமேன்’ சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், 22, கூறியது: 

இந்தியாவின் கோஹ்லி, கேப்டன் பணியில் மிகச் சிறப்பாக செயல்படுகிறார். பேட்டிங்கில் மட்டுமன்றி, பீல்டிங்கிலும் மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். எந்த இடத்தில் பீல்டிங் செய்தாலும், அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுகிறார். வலைப் பயிற்சியின் போதும் இதைத் தான் பின்பற்றுகிறார். இவரைப் பார்த்து ஒரு சதவீதம் முன்னேற்றம் அடைந்தாலும், அது அணிக்கு நல்ல விஷயம் தான். இளம் வீரர்களிடம் பேசி, அவர்களுக்கு என்ன வேண்டும், அணியில் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என, கோஹ்லி கேட்கிறார். களத்தில் பவுலர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, சுதந்திரமாக செயல்பட அனுமதி தருகிறார். நான் பவுலிங் செய்யும் போது, ‘ பீல்டிங் எப்படி அமைக்க வேண்டும்,’ என, என்னிடம் வந்து கேட்கிறார்.

மகிழ்ச்சி:

டெஸ்ட், ஒருநாள் தொடர்களைத் தொடர்ந்து, ‘டுவென்டி–20’ போட்டியிலும் எனக்கு வியக்கத்தக்க வகையில் ஆதரவு தந்தார். இதுபோன்ற கேப்டன் மற்றும் ஒற்றுமை நிறைந்த அணியில், விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. இலங்கை தொடரில் மூன்றாவது டெஸ்டில் தான் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும், இதில் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி. ஒருநாள் தொடரில் கடைசி இரு போட்டியில் மட்டும் களமிறங்கினேன். இதேபோல, ‘டுவென்டி–20’ போட்டியிலும் நன்கு செயல்பட்டதாகத் தான் நினைக்கிறேன். 

இந்திய அணியில் சுழற்சி முறையில் தான் வாய்ப்பு என, கேப்டன் மற்றும் பயிற்சியாளர் முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் ஒரு வீரர் என்ற முறையில் பங்கேற்கும் அனைத்து போட்டியிலும் கட்டாயம் திறமை வெளிப்படுத்தியாக வேண்டும்.

சுழற்சி முறை:

உலக கோப்பை தொடர் வரவுள்ள நிலையில், அனைத்து விதத்திலும் முயற்சித்து பார்க்கும் இந்த சுழற்சி முறை பாராட்டுதலுக்கு உரியது. அடுத்து இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகளில் விளையாடுகிறது. பின், நியூசிலாந்துக்கு எதிராக மோதுகிறது. இத்தொடர்களில் ‘டுவென்டி–20’ போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்து இருப்பது மகிழ்ச்சி தான். இவ்வாறு குல்தீப் யாதவ் கூறினார்.

பயிற்சியாளர் பாராட்டு

இலங்கை அணி பயிற்சியாளர் நிக் போதாஸ் கூறியது: இந்திய அணி சிறப்பானது. இந்த அணிக்கு எதிராக மோதுவது அல்லது இவர்களை வீழ்த்த நினைப்பது என்பது கடினமானது. இந்திய அணியிடம் இருந்து எதுவும் கற்றுக் கொள்ளவில்லை என்றால் அது தவறு.

பெரும்பாலானவை அடிப்படை விஷயங்கள் தான் என்றாலும், அனைத்தையும் இந்திய வீரர்கள் சிறப்பாக செய்கின்றனர். தங்கள் பணியில் மும்முரமாக உள்ளனர். கேப்டன் கோஹ்லி சிறந்த ‘ரோல் மாடலாக’ உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
Cricket logo
United Arab Emirates - 272/7 (50)
Namibia - 274/6 (48.5)
Namibia won by 4 wkts
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?