Advertisement


வங்கத்தை வீழ்த்தியது ஆஸி.,: டெஸ்ட் தொடர் ‘டிரா’

செப்டம்பர் 07, 2017.
 Comments  
 


steve smith
 

சிட்டகாங்: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் லியான் ‘சுழலில்’ அசத்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை ‘டிரா’ செய்தது.

வங்கதேசம் சென்ற ஆஸ்திரேலிய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் வங்கதேசம் வென்றது. இரு அணிகள் மோதிய கடைசி மற்றும் இரண்டாவது டெஸ்ட் சிட்டகாங்கில் நடந்தது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 305 ரன்கள் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 377 ரன்கள் எடுத்திருந்தது. ஓகீபே (8), அவுட்டாகாமல் இருந்தார். 

நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. லியான் ‘டக்’ அவுட்டாக, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 377 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. 

லியான் அபாரம்:

இரண்டாவது இன்னிங்சை துவக்கிய வங்கதேச அணிக்கு சவுமியா சர்கார் (5) ஒற்றை இலக்கில் திரும்பினார். பின், லியான் ‘சுழலில்’ மிரட்டினார். இவரின் பந்துவீச்சில் தமிம் (12), இம்ருல் (15), சாகிப் (2) உள்ளிட்டோர் சிக்கினர். ஓகீபே பந்தில் நாசிர் ஹொசைன் (5) ஆட்டமிழந்தார். அதிகபட்சமாக கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் 31 ரன்கள் எடுத்தார். முடிவில், வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 157 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக லியான் 6 விக்கெட் வீழ்த்தினார்.

எளிய இலக்கு: 

பின், 86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. வார்னர் (8), கேப்டன் ஸ்மித் (16) விரைவில் அவுட்டாகினர். சாகிப் பந்தில் ரென்ஷா (22) ஆட்டமிழந்தார். இருப்பினும், ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹேண்ட்ஸ்கோம்ப் (16), மேக்ஸ்வெல்(25) அவுட்டாகாமல் இருந்தனர்.

இரு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 13 விக்கெட் (7+6) வீழ்த்திய லியான் ஆட்ட நாயகன் விருது வென்றார். தொடர் நாயகன் விருதை லியான், வார்னர் கைப்பற்றினர். 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 1–1 என ‘டிரா’ ஆனது.

முதலிடம்

இந்த ஆண்டில் இதுவரை நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்களில் லியான் (7 போட்டி, 46 விக்.,) முதலிடம் பிடித்தார். அஷ்வின் (8 போட்டி, 44 விக்.,), ஜடேஜா (7 போட்டி, 44 விக்.,) இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். தென் ஆப்ரிக்காவின் ரபாடா (8 போட்டி, 39 விக்.,) மூன்றாவது இடம் வகிக்கிறார்.

22

வங்கதேச அணிக்கு எதிரான இரு டெஸ்டில் லியான் 22  விக்கெட் (9+13) வீழ்த்தினார். இதையடுத்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் இலங்கையின் முரளிதரனுடன், இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் இலங்கையின் ஹெராத் (23) உள்ளார். 

13

சிட்டகாங் டெஸ்டில் லியான், 13 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம், ஆசிய மண்ணில் நடந்த டெஸ்டில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன் ஓகீபே, புனே டெஸ்டில் (எதிர்– இந்தியா, 2017) 12 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

2

ஆசிய மண்ணில் ஒரு டெஸ்டில் 13 விக்கெட் கைப்பற்றிய 2வது அன்னிய பவுலர் என்ற பெருமை பெற்றார் லியான். இதற்கு முன், இங்கிலாந்தின் இயான் போத்தம், மும்பை டெஸ்டில் (எதிர்– இந்தியா, 1980) 13 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

2

ஆஸ்திரேலியாவின் லியான், டெஸ்ட் அரங்கில் 10 விக்கெட் அல்லது அதற்கு மேல் என, 2வது முறையாக வீழ்த்தினார். இதற்கு முன், அடிலெய்டு டெஸ்டில் (எதிர்– இந்தியா, 2014) 12 விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?