Advertisement


யு.எஸ்., ஓபன்: பெடரர் அதிர்ச்சி தோல்வி

செப்டம்பர் 07, 2017.
 Comments  
 


US Open tennis federer
 

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் காலிறுதியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். ‘நம்பர்–1’ வீரர் நடால், அரையிறுதிக்கு முன்னேறினார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யு.எஸ்., ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் ‘நம்பர்–3’ வீரர், சுவிட்சர்லாந்தின் பெடரர், அர்ஜென்டினாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோவை சந்தித்தார். இதன் முதல் செட்டை 5–7 என, இழந்த பெடரர், அடுத்த செட்டை 6–3 என, கைப்பற்றி பதிலடி கொடுத்தார். இதன் பின் சுதாரித்துக் கொண்ட டெல் போட்ரோ, ‘டை பிரேக்கர்’ வரை சென்ற மூன்றாவது செட்டை 7–6 என, வென்றார். தொடர்ந்து அசத்திய இவர், நான்காவது செட்டையும் 6–4 என, தன் வசப்படுத்தினார். முடிவில், பெடரர் 5–7, 6–3, 6–7, 4–6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். கடந்த 2008க்குப் பின், இத்தொடரில் கோப்பை வெல்ல முடியாத சோகத்தில், பெடரர் வெளியேறினார்.

அரையிறுதியில் நடால்:

மற்றொரு காலிறுதியில் ‘நம்பர்–1’ வீரர் நடால் (ஸ்பெயின்), ரஷ்யாவின் ஆன்ட்ரி ரூபலவை சந்தித்தார். இதில் நடால் 6–1, 6–2, 6–2 என்ற நேர் செட்கணக்கில் எளிதாக வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

நழுவிய வாய்ப்பு:

கடந்த 13 ஆண்டுகளாக, முன்னணி வீரர்கள் பெடரர்–நடால், 37 முறை மோதினர். இருப்பினும், இதுவரை யு.எஸ்., ஓபன் தொடரில் ஒரு முறை கூட எதிர்த்து விளையாடியது கிடையாது. இம்முறை ஒரே பிரிவில் இடம் பெற்றதால், அரையிறுதியில் மோத வாய்ப்பு இருந்தது. ஆனால், காலிறுதியில் பெடரர் தோற்றதால், இன்று நடக்கும் அரையிறுதியில் நடால், டெல் போட்ரோ மோதுகின்றனர்.

பிலிஸ்கோவா ‘ஷாக்’:

பெண்கள் ஒற்றையர் காலிறுதியில், ‘நம்பர்–1’ வீராங்கனை செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா, அமெரிக்காவின் கோகோவை எதிர்கொண்டார். இதில் பிலிஸ்கோவா 6–7, 3–6 என்ற நேர் செட்கணக்கில் வீழ்ந்தார்.

மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் மடிசன் கெய்ஸ், எஸ்தோனியாவின் கையா கனேபியை 6–3, 6–3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?