Advertisement


வார்னர் சதம்: ஆஸி., முன்னிலை

செப்டம்பர் 06, 2017.
 Comments  
 


warner
 

சிட்டகாங்: வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் வார்னர் சதம் கடந்து கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றது.

வங்கதேசம் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வங்கதேசம் வென்றது. இரண்டாவது டெஸ்ட், சிட்டகாங்கில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 305 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. வார்னர் (88), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் (69) அவுட்டாகாமல் இருந்தனர்.

நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டம், மழை மற்றும் ஆடுகள ஈரப்பதம் காரணமாக தாமதமாக துவங்கியது. மூன்றாவது விக்கெட்டுக்கு 152 ரன்கள் சேர்த்த போது ஹேண்ட்ஸ்கோம்ப் (82) ‘ரன்–அவுட்’ ஆனார். நாசிர் ஹொசைன் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய வார்னர், டெஸ்ட் அரங்கில் தனது 20வது சதமடித்தார். அபாரமாக ஆடிய இவர், 123 ரன்னில் அவுட்டானார். மேக்ஸ்வெல் (38) ஓரளவு கைகொடுத்தார். கார்ட்ரைட் (18), மாத்யூ வேட் (8), கம்மின்ஸ் (4) சொற்ப ரன்னில் வெளியேறினர். சாகிப் ‘சுழலில்’ ஆஷ்டன் அகார் (22) சிக்கினார்.

மூன்றாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்கு 377 ரன்கள் எடுத்து 72 ரன்கள் முன்னிலை பெற்றது. ஸ்டீபன் ஓகீபே (8), நாதன் லியான் (0) அவுட்டாகாமல் இருந்தனர். வங்கதேசம் சார்பில் மெகிதி ஹசன் மிராஸ், முஷ்தபிஜுர் ரஹ்மான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?