Advertisement


விலகினார் ஆன்டி முர்ரே

செப்டம்பர் 06, 2017.
 Comments  
 


andy murray
 

லண்டன்: பிரிட்டன் வீரர் முர்ரே, இந்த ஆண்டில் நடக்கவுள்ள அனைத்து தொடரிலிருந்தும் விலகினார்.

பிரிட்டன் டென்னிஸ் நட்சத்திரம் ஆன்டி முர்ரே, 30. ‘நம்பர்–2’ வீரரான இவர் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பிரிவில் 3 பட்டம் வென்றுள்ளார். கடந்த விம்பிள்டன் தொடரின் காலிறுதியில் அமெரிக்காவின் சாம் குயரியிடம் வீழ்ந்தார். பின், இடுப்பபகுதி காயம் தொல்லை தர யு.எஸ்., ஓபனிலிருந்து விலகினார். இந்நிலையில், இந்த ஆண்டு எவ்வித போட்டியிலும் பங்கேற்க போவதில்லை என முடிவு எடுத்துள்ளார். 

இது குறித்து முர்ரே முகநுாலில் வெளியிட்ட செய்தியில்,‘ கடந்த சில மாதங்களாக இடுப்புப்பகுதி காயம் தொல்லை தருகிறது. இதிலிருந்து முழுமையாக குணமடைய, நீண்ட கால ஓய்வு தேவை. எனவே, இந்த ஆண்டில் பீஜிங், பாரிஸ் நகரில் நடக்கவுள்ள அனைத்து தொடரிலிருந்தும் விலகுகிறேன். அடுத்த ஆண்டு துவக்கத்தில் பிரிஸ்பேனில் தொடரில் பங்கேற்பேன்,’ என, தெரிவித்துள்ளார். 

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?