Advertisement


உலக கால்பந்து: சிக்கலில் அர்ஜென்டினா

செப்டம்பர் 06, 2017.
 Comments  
 


messi
 

பியுனஸ் ஏர்ஸ்: வெனிசுலா அணிக்கு எதிராக ‘டிரா’ செய்த அர்ஜென்டினா அணி, உலக கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவில், ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து (2018, ஜூன் 14 – ஜூலை 15) தொடர் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா என 6 பிரிவுகளாக நடக்கிறது. தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பை சேர்ந்த அணிகளுக்கான தகுதிச் சுற்றில் பிரேசில், உருகுவே, கொலம்பியா என 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் புள்ளிப்பட்டியலில் ‘டாப்–4’ இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பைக்கு தகுதி பெறும்.

அர்ஜென்டினாவில் உள்ள பியுனஸ் ஏர்ஸ் நகரில் நடந்த போட்டியில் அர்ஜென்டினா, வெனிசுலா அணிகள் மோதின. இப்போட்டி, ஆட்டநேர முடிவில் 1–1 என ‘டிரா’ ஆனது. வெனிசுலா சார்பில் முரில்லோ ஒரு கோல் அடித்தார். அர்ஜென்டினா அணிக்கு வெனிசுலாவின் பெல்ட்சர் ‘சேம்சைடு’ கோல் அடித்தார்.

அர்ஜென்டினா அணி, இதுவரை விளையாடிய 16 போட்டிகளில் 6 வெற்றி, 6 ‘டிரா’, 4 தோல்வி என 24 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உள்ள பிரேசில் அணி (37 புள்ளி), உலக கோப்பைக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. அடுத்த மூன்று இடங்களில் உருகுவே (27), கொலம்பியா (26), பெரு (24) அணிகள் உள்ளன.

கடந்த 2014ல் பைனல் வரை சென்ற அர்ஜென்டினா, உலக கோப்பைக்கு தகுதி பெற, பெரு (அக். 5), ஈகுவடார் (அக். 10) அணிகளை வென்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பின், மற்ற போட்டிகளின் முடிவை பொறுத்து அர்ஜென்டினாவின் இடம் உறுதியாகும். இதேபோல, ‘கோபா அமெரிக்கா’ நடப்பு சாம்பியன் சிலி அணி (23 புள்ளி), உலக கோப்பைக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?